ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
Sri Vishnu Sahasranamam — Lyrics in Tamil
"விச்வம் விஷ்ணுர் வஷட்காரோ" — மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உபதேசித்த மகாவிஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள். எல்லாத் துன்பங்களும் நீங்கப் பாராயணம் செய்யப்படுகிறது.
Also known as: Vishnu Sahasranamam Lyrics in Tamil · Vishnu Sahasranama Stotram · Vishvam Vishnur Vashatkaro
ௐ ஸகலஸௌபாக்யதாயகம் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ||
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசாந்தயே || 1 ||
யஸ்ய த்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பர: சதம் |விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே || 2 ||
வ்யாஸம் வஸிஷ்டனப்தாரம் சக்தே: பௌத்ரமகல்மஷம் |பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோநிதிம் || 3 ||
வ்யாஸாய விஷ்ணுரூபாய வ்யாஸரூபாய விஷ்ணவே |நமோ வை ப்ரஹ்மநிதயே வாஸிஷ்டாய நமோ நம: || 4 ||
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே |ஸதைகரூபரூபாய விஷ்ணவே ஸர்வஜிஷ்ணவே || 5 ||
யஸ்ய ஸ்மரணமாத்ரேண ஜன்மஸம்ஸாரபந்தனாத் |விமுச்யதே நமஸ்தஸ்மை விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 6 ||
ௐ நமோ விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே |ஸ்ரீவைசம்பாயன உவாச —ச்ருத்வா தர்மானசேஷேண பாவனானி ச ஸர்வச: |யுதிஷ்டிர: சாந்தனவம் புனரேவாப்யபாஷத || 7 ||
யுதிஷ்டிர உவாச —கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம் |ஸ்துவந்த: கம் கமர்சந்த: ப்ராப்னுயுர்மானவா: சுபம் || 8 ||
கோ தர்ம: ஸர்வதர்மாணாம் பவத: பரமோ மத: |கிம் ஜபன்முச்யதே ஜந்துர்ஜன்மஸம்ஸாரபந்தனாத் || 9 ||
பீஷ்ம உவாச —ஜகத்ப்ரபும் தேவதேவமனந்தம் புருஷோத்தமம் |ஸ்துவன் நாமஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: || 10 ||
தமேவ சார்சயந்நித்யம் பக்த்யா புருஷமவ்யயம் |த்யாயன் ஸ்துவன் நமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச || 11 ||
அநாதிநிதனம் விஷ்ணும் ஸர்வலோகமஹேச்வரம் |லோகாத்யக்ஷம் ஸ்துவந்நித்யம் ஸர்வது:காதிகோ பவேத் || 12 ||
ப்ரஹ்மண்யம் ஸர்வதர்மக்ஞம் லோகானாம் கீர்திவர்தனம் |லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூதபவோத்பவம் || 13 ||
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத: |யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா || 14 ||
பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் || 15 ||
பவித்ராணாம் பவித்ரம் யோ மங்கலானாம் ச மங்கலம் |தைவதம் தைவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா || 16 ||
யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதியுகாகமே |யஸ்மிம்ச்ச ப்ரலயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே || 17 ||
தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே |விஷ்ணோர்நாமஸஹஸ்ரம் மே ச்ருணு பாபபயாபஹம் || 18 ||
யானி நாமானி கௌணானி விக்யாதானி மஹாத்மன: |ருஷிபி: பரிகீதானி தானி வக்ஷ்யாமி பூதயே || 19 ||
ருஷிர்நாம்னாம் ஸஹஸ்ரஸ்ய வேதவ்யாஸோ மஹாமுனி: |சந்தோனுஷ்டுப் ததா தேவோ பகவான் தேவகீஸுத: || 20 ||
அம்ருதாம்சூத்பவோ பீஜம் சக்திர்தேவகிநந்தன: |த்ரிஸாமா ஹ்ருதயம் தஸ்ய சாந்த்யர்தே விநியோஜ்யதே || 21 ||
விஷ்ணும் ஜிஷ்ணும் மஹாவிஷ்ணும் ப்ரபவிஷ்ணும் மஹேச்வரம் |அனேகரூபதைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம் || 22 ||
பூர்வந்யாஸ:
ஸ்ரீவேதவ்யாஸ உவாச ---ௐ அஸ்ய ஸ்ரீவிஷ்ணோர்திவ்யஸஹஸ்ரநாமஸ்தோத்ரமஹாமந்த்ரஸ்ய ||
ஸ்ரீவேதவ்யாஸோ பகவாந்ருஷி: |அனுஷ்டுப் சந்த: |ஸ்ரீமஹாவிஷ்ணு: பரமாத்மா ஸ்ரீமந்நாராயணோ தேவதா |அம்ருதாம்சூத்பவோ பானுரிதி பீஜம் |தேவகீநந்தன: ஸ்ரஷ்டேதி சக்தி: |உத்பவ: க்ஷோபணோ தேவ இதி பரமோ மந்த்ர: |சங்கப்ருன்னந்தகீ சக்ரீதி கீலகம் |சார்ங்கதன்வா கதாதர இத்யஸ்த்ரம் |ரதாங்கபாணிரக்ஷோப்ய இதி நேத்ரம் |த்ரிஸாமா ஸாமக: ஸாமேதி கவசம் |ஆனந்தம் பரப்ரஹ்மேதி யோனி: |ருது: ஸுதர்சன: கால இதி திக்பந்த: ||
ஸ்ரீவிச்வரூப இதி த்யானம் |ஸ்ரீமஹாவிஷ்ணுப்ரீத்யர்தம் ஸஹஸ்ரநாமஜபே விநியோக: ||
அத ந்யாஸ:
ௐ சிரஸி வேதவ்யாஸர்ஷயே நம: |முகே அனுஷ்டுப்சந்தஸே நம: |ஹ்ருதி ஸ்ரீக்ருஷ்ணபரமாத்மதேவதாயை நம: |குஹ்யே அம்ருதாம்சூத்பவோ பானுரிதி பீஜாய நம: |பாதயோர்தேவகீநந்தன: ஸ்ரஷ்டேதி சக்தயே நம: |ஸர்வாங்கே சங்கப்ருன்னந்தகீ சக்ரீதி கீலகாய நம: |கரஸம்பூடே மம ஸ்ரீக்ருஷ்ணப்ரீத்யர்தே ஜபே விநியோக: ||
இதி ருஷ்யாதிந்யாஸ: ||
அத கரந்யாஸ:
ௐ விச்வம் விஷ்ணுர்வஷட்கார இத்யங்குஷ்டாப்யாம் நம: |அம்ருதாம்சூத்பவோ பானுரிதி தர்ஜனீப்யாம் நம: |ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத்ப்ரஹ்மேதி மத்யமாப்யாம் நம: |ஸுவர்ணபிந்துரக்ஷோப்ய இத்யநாமிகாப்யாம் நம: |நிமிஷோநிமிஷ: ஸ்ரக்வீதி கநிஷ்டிகாப்யாம் நம: |ரதாங்கபாணிரக்ஷோப்ய இதி கரதலகரப்ருஷ்டாப்யாம் நம: |இதி கரந்யாஸ: ||
அத ஷடங்கந்யாஸ:
ௐ விச்வம் விஷ்ணுர்வஷட்கார இதி ஹ்ருதயாய நம: |அம்ருதாம்சூத்பவோ பானுரிதி சிரஸே ஸ்வாஹா |ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத்ப்ரஹ்மேதி சிகாயை வஷட் |ஸுவர்ணபிந்துரக்ஷோப்ய இதி கவசாய ஹும் |நிமிஷோநிமிஷ: ஸ்ரக்வீதி நேத்ரத்ரயாய வௌஷட் |ரதாங்கபாணிரக்ஷோப்ய இத்யஸ்த்ராய பட் |இதி ஷடங்கந்யாஸ: ||
ஸ்ரீக்ருஷ்ணப்ரீத்யர்தே விஷ்ணோர்திவ்யஸஹஸ்ரநாமஜபமஹம் கரிஷ்யே இதி ஸங்கல்ப: |
அத த்யானம்
க்ஷீரோதன்வத்ப்ரதேசே சுசிமணிவிலஸத்ஸைகதே மௌக்திகானாம்மாலாக்லுப்தாஸனஸ்த: ஸ்படிகமணினிபைர்மௌக்திகைர்மண்டிதாங்க: |சுப்ரைரப்ரைரதப்ரைருபரிவிரசிதைர்முக்தபீயூஷவர்ஷைரானந்தீந: புனீயாதரிநலினகதாசங்கபாணிர்முகுந்த: || 1 ||
பூ: பாதௌ யஸ்ய நாபிர்வியதஸுரனிலச்சந்த்ரஸூர்யௌ ச நேத்ரேகர்ணாவாசா: சிரோ த்யௌர்முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி: |அந்த:ஸ்தம் யஸ்ய விச்வம் ஸுரநரகககோபோகிகந்தர்வதைத்யை:சித்ரம் ரம்ரம்யதே தம் த்ரிபுவனவபுஷம் விஷ்ணுமீசம் நமாமி || 2 ||
ௐ சாந்தாகாரம் புஜகசயனம் பத்மநாபம் ஸுரேசம்விச்வாதாரம் ககனஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம் |லக்ஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிபிர்த்யானகம்யம்வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம் || 3 ||
மேகச்யாமம் பீதகௌசேயவாஸம்ஸ்ரீவத்ஸாங்கம் கௌஸ்துபோத்பாஸிதாங்கம் |புண்யோபேதம் புண்டரீகாயதாக்ஷம்விஷ்ணும் வந்தே ஸர்வலோகைகநாதம் || 4 ||
நம: ஸமஸ்தபூதாநாமாதிபூதாய பூப்ருதே |அனேகரூபரூபாய விஷ்ணவே ப்ரபவிஷ்ணவே || 5 ||
ஸசங்கசக்ரம் ஸகிரீடகுண்டலம்ஸபீதவஸ்த்ரம் ஸரஸீருஹேக்ஷணம் |ஸஹாரவக்ஷ:ஸ்தலகௌஸ்துபச்ரியம்நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம் || 6 ||
சாயாயாம் பாரிஜாதஸ்ய ஹேமஸிம்ஹாஸனோபரிஆஸீனமம்புதச்யாமமாயதாக்ஷமலங்க்ருதம் |சந்த்ரானனம் சதுர்பாஹும் ஸ்ரீவத்ஸாங்கிதவக்ஷஸம்ருக்மிணீஸத்யபாமாப்யாம் ஸஹிதம் க்ருஷ்ணமாச்ரயே || 7 ||
ஸ்தோத்ரம்
|| ஹரி: ௐ ||
விச்வம் விஷ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்ப்ரபு: |பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமா கதி: |அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரக்ஞோக்ஷர ஏவ ச || 2 ||
யோகோ யோகவிதாம் நேதா ப்ரதானபுருஷேச்வர: |நாரஸிம்ஹவபு: ஸ்ரீமான் கேசவ: புருஷோத்தம: || 3 ||
ஸர்வ: சர்வ: சிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீச்வர: || 4 ||
ஸ்வயம்பூ: சம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |அநாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: || 5 ||
அப்ரமேயோ ஹ்ருஷீகேச: பத்மநாபோமரப்ரபு: |விச்வகர்மா மனுஸ்த்வஷ்டா ஸ்தவிஷ்ட: ஸ்தவிரோ த்ருவ: || 6 ||
அக்ராஹ்ய: சாச்வத: க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்தன: |ப்ரபூதஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மங்கலம் பரம் || 7 ||
ஈசான: ப்ராணத: ப்ராணோ ஜ்யேஷ்ட: ச்ரேஷ்ட: ப்ரஜாபதி: |ஹிரண்யகர்போ பூகர்போ மாதவோ மதுஸூதன: || 8 ||
ஈச்வரோ விக்ரமீ தன்வீ மேதாவீ விக்ரம: க்ரம: |அனுத்தமோ துராதர்ஷ: க்ருதக்ஞ: க்ருதிராத்மவான் || 9 ||
ஸுரேச: சரணம் சர்ம விச்வரேதா: ப்ரஜாபவ: |அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்சன: || 10 ||
அஜ: ஸர்வேச்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: || 11 ||
வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மாஸம்மித: ஸம: |அமோக: புண்டரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: || 12 ||
ருத்ரோ பஹுசிரா பப்ருர்விச்வயோனி: சுசிச்ரவா: |அம்ருத: சாச்வத: ஸ்தாணுர்வராரோஹோ மஹாதபா: || 13 ||
ஸர்வக: ஸர்வவித்பானுர்விஷ்வக்ஸேனோ ஜனார்தன: |வேதோ வேதவிதவ்யங்கோ வேதாங்கோ வேதவித் கவி: || 14 ||
லோகாத்யக்ஷ: ஸுராத்யக்ஷோ தர்மாத்யக்ஷ: க்ருதாக்ருத: |சதுராத்மா சதுர்வ்யூஹச்சதுர்தம்ஷ்ட்ரச்சதுர்புஜ: || 15 ||
ப்ராஜிஷ்ணுர்போஜனம் போக்தா ஸஹிஷ்ணுர்ஜகதாதிஜ: |அனகோ விஜயோ ஜேதா விச்வயோனி: புனர்வஸு: || 16 ||
உபேந்த்ரோ வாமன: ப்ராம்சுரமோக: சுசிரூர்ஜித: |அதீந்த்ர: ஸங்க்ரஹ: ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம: || 17 ||
வேத்யோ வைத்ய: ஸதாயோகீ வீரஹா மாதவோ மது: |அதீந்த்ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாபல: || 18 ||
மஹாபுத்திர்மஹாவீர்யோ மஹாசக்திர்மஹாத்யுதி: |அநிர்தேச்யவபு: ஸ்ரீமானமேயாத்மா மஹாத்ரித்ருக் || 19 ||
மஹேஷ்வாஸோ மஹீபர்தா ஸ்ரீநிவாஸ: ஸதாம் கதி: |அநிருத்த: ஸுரானந்தோ கோவிந்தோ கோவிதாம் பதி: || 20 ||
மரீசிர்தமனோ ஹம்ஸ: ஸுபர்ணோ புஜகோத்தம: |ஹிரண்யநாப: ஸுதபா: பத்மநாப: ப்ரஜாபதி: || 21 ||
அம்ருத்யு: ஸர்வத்ருக் ஸிம்ஹ: ஸந்தாதா ஸந்திமான் ஸ்திர: |அஜோ துர்மர்ஷண: சாஸ்தா விச்ருதாத்மா ஸுராரிஹா || 22 ||
குருர்குருதமோ தாம ஸத்ய: ஸத்யபராக்ரம: |நிமிஷோநிமிஷ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ: || 23 ||
அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |ஸஹஸ்ரமூர்தா விச்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் || 24 ||
ஆவர்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்தன: |அஹ: ஸம்வர்தகோ வஹ்நிரனிலோ தரணீதர: || 25 ||
ஸுப்ரஸாத: ப்ரஸன்னாத்மா விச்வத்ருக்விச்வபுக்விபு: |ஸத்கர்தா ஸத்க்ருத: ஸாதுர்ஜஹ்னுர்நாராயணோ நர: || 26 ||
அஸங்க்யேயோப்ரமேயாத்மா விசிஷ்ட: சிஷ்டக்ருச்சுசி: |ஸித்தார்த: ஸித்தஸங்கல்ப: ஸித்தித: ஸித்திஸாதன: || 27 ||
வ்ருஷாஹீ வ்ருஷபோ விஷ்ணுர்வ்ருஷபர்வா வ்ருஷோதர: |வர்தனோ வர்தமானச்ச விவிக்த: ச்ருதிஸாகர: || 28 ||
ஸுபுஜோ துர்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |நைகரூபோ ப்ருஹத்ரூப: சிபிவிஷ்ட: ப்ரகாசன: || 29 ||
ஓஜஸ்தேஜோத்யுதிதர: ப்ரகாசாத்மா ப்ரதாபன: |ருத்த: ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ரச்சந்த்ராம்சுர்பாஸ்கரத்யுதி: || 30 ||
அம்ருதாம்சூத்பவோ பானு: சசபிந்து: ஸுரேச்வர: |ஔஷதம் ஜகத: ஸேது: ஸத்யதர்மபராக்ரம: || 31 ||
பூதபவ்யபவந்நாத: பவன: பாவனோனல: |காமஹா காமக்ருத்காந்த: காம: காமப்ரத: ப்ரபு: || 32 ||
யுகாதிக்ருத்யுகாவர்தோ நைகமாயோ மஹாசன: |அத்ருச்யோ வ்யக்தரூபச்ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் || 33 ||
இஷ்டோவிசிஷ்ட: சிஷ்டேஷ்ட: சிகண்டீ நஹுஷோ வ்ருஷ: |க்ரோதஹா க்ரோதக்ருத்கர்தா விச்வபாஹுர்மஹீதர: || 34 ||
அச்யுத: ப்ரதித: ப்ராண: ப்ராணதோ வாஸவானுஜ: |அபாம்நிதிரதிஷ்டானமப்ரமத்த: ப்ரதிஷ்டித: || 35 ||
ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: || 36 ||
அசோகஸ்தாரணஸ்தார: சூர: சௌரிர்ஜனேச்வர: |அனுகூல: சதாவர்த: பத்மீ பத்மனிபேக்ஷண: || 37 ||
பத்மநாபோரவிந்தாக்ஷ: பத்மகர்ப: சரீரப்ருத் |மஹர்த்திர்ருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: || 38 ||
அதுல: சரபோ பீம: ஸமயக்ஞோ ஹவிர்ஹரி: |ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: || 39 ||
விக்ஷரோ ரோஹிதோ மார்கோ ஹேதுர்தாமோதர: ஸஹ: |மஹீதரோ மஹாபாகோ வேகவானமிதாசன: || 40 ||
உத்பவ: க்ஷோபணோ தேவ: ஸ்ரீகர்ப: பரமேச்வர: |கரணம் காரணம் கர்தா விகர்தா கஹனோ குஹ: || 41 ||
வ்யவஸாயோ வ்யவஸ்தான: ஸம்ஸ்தான: ஸ்தானதோ த்ருவ: |பரர்த்தி: பரமஸ்பஷ்டஸ்துஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: || 42 ||
ராமோ விராமோ விரஜோ (or விரதோ) மார்கோ நேயோ நயோனய: |வீர: சக்திமதாம் ச்ரேஷ்டோ தர்மோ தர்மவிதுத்தம: || 43 ||
வைகுண்ட: புருஷ: ப்ராண: ப்ராணத: ப்ரணவ: ப்ருது: |ஹிரண்யகர்ப: சத்ருக்னோ வ்யாப்தோ வாயுரதோக்ஷஜ: || 44 ||
ருது: ஸுதர்சன: கால: பரமேஷ்டீ பரிக்ரஹ: |உக்ர: ஸம்வத்ஸரோ தக்ஷோ விச்ராமோ விச்வதக்ஷிண: || 45 ||
விஸ்தார: ஸ்தாவரஸ்தாணு: ப்ரமாணம் பீஜமவ்யயம் |அர்தோனர்தோ மஹாகோசோ மஹாபோகோ மஹாதன: || 46 ||
அநிர்விண்ண: ஸ்தவிஷ்டோபூர்தர்மயூபோ மஹாமக: |நக்ஷத்ரனேமிர்நக்ஷத்ரீ க்ஷம: க்ஷாம: ஸமீஹன: || 47 ||
யக்ஞ இஜ்யோ மஹேஜ்யச்ச க்ரது: ஸத்ரம் ஸதாம் கதி: |ஸர்வதர்சீ விமுக்தாத்மா ஸர்வக்ஞோ ஞானமுத்தமம் || 48 ||
ஸுவ்ரத: ஸுமுக: ஸூக்ஷ்ம: ஸுகோஷ: ஸுகத: ஸுஹ்ருத் |மனோஹரோ ஜிதக்ரோதோ வீரபாஹுர்விதாரண: || 49 ||
ஸ்வாபன: ஸ்வவசோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத் |வத்ஸரோ வத்ஸலோ வத்ஸீ ரத்நகர்போ தனேச்வர: || 50 ||
தர்மகுப்தர்மக்ருத்தர்மீ ஸதஸத்க்ஷரமக்ஷரம் |அவிக்ஞாதா ஸஹஸ்ராம்சுர்விதாதா க்ருதலக்ஷண: || 51 ||
கபஸ்தினேமி: ஸத்த்வஸ்த: ஸிம்ஹோ பூதமஹேச்வர: |ஆதிதேவோ மஹாதேவோ தேவேசோ தேவப்ருத்குரு: || 52 ||
உத்தரோ கோபதிர்கோப்தா ஞானகம்ய: புராதன: |சரீரபூதப்ருத்போக்தா கபீந்த்ரோ பூரிதக்ஷிண: || 53 ||
ஸோமபோம்ருதப: ஸோம: புருஜித்புருஸத்தம: |வினயோ ஜய: ஸத்யஸந்தோ தாசார்ஹ: ஸாத்த்வதாம்பதி: || 54 ||
ஜீவோ வினயிதா ஸாக்ஷீ முகுந்தோமிதவிக்ரம: |அம்போநிதிரனந்தாத்மா மஹோததிசயோந்தக: || 55 ||
அஜோ மஹார்ஹ: ஸ்வாபாவ்யோ ஜிதாமித்ர: ப்ரமோதன: |ஆனந்தோ நந்தனோ நந்த: ஸத்யதர்மா த்ரிவிக்ரம: || 56 ||
மஹர்ஷி: கபிலாசார்ய: க்ருதக்ஞோ மேதினீபதி: |த்ரிபதஸ்த்ரிதசாத்யக்ஷோ மஹாச்ருங்க: க்ருதாந்தக்ருத் || 57 ||
மஹாவராஹோ கோவிந்த: ஸுஷேண: கனகாங்கதீ |குஹ்யோ கபீரோ கஹனோ குப்தச்சக்ரகதாதர: || 58 ||
வேதா: ஸ்வாங்கோஜித: க்ருஷ்ணோ த்ருட: ஸங்கர்ஷணோச்யுத: |வருணோ வாருணோ வ்ருக்ஷ: புஷ்கராக்ஷோ மஹாமனா: || 59 ||
பகவான் பகஹா(ஆ)நந்தீ வனமாலீ ஹலாயுத: |ஆதித்யோ ஜ்யோதிராதித்ய: ஸஹிஷ்ணுர்கதிஸத்தம: || 60 ||
ஸுதன்வா கண்டபரசுர்தாருணோ த்ரவிணப்ரத: |திவ:ஸ்ப்ருக் ஸர்வத்ருக்வ்யாஸோ வாசஸ்பதிரயோநிஜ: || 61 ||
த்ரிஸாமா ஸாமக: ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக் |ஸம்ந்யாஸக்ருச்சம: சாந்தோ நிஷ்டா சாந்தி: பராயணம் || 62 ||
சுபாங்க: சாந்தித: ஸ்ரஷ்டா குமுத: குவலேசய: |கோஹிதோ கோபதிர்கோப்தா வ்ருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: || 63 ||
அநிவர்தீ நிவ்ருத்தாத்மா ஸங்க்ஷேப்தா க்ஷேமக்ருச்சிவ: |ஸ்ரீவத்ஸவக்ஷா: ஸ்ரீவாஸ: ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்வர: || 64 ||
ஸ்ரீத: ஸ்ரீச: ஸ்ரீநிவாஸ: ஸ்ரீநிதி: ஸ்ரீவிபாவன: |ஸ்ரீதர: ஸ்ரீகர: ச்ரேய: ஸ்ரீமாம்ல்லோகத்ரயாச்ரய: || 65 ||
ஸ்வக்ஷ: ஸ்வங்க: சதானந்தோ நந்திர்ஜ்யோதிர்கணேச்வர: |விஜிதாத்மாவிதேயாத்மா ஸத்கீர்திச்சின்னஸம்சய: || 66 ||
உதீர்ண: ஸர்வதச்சக்ஷுரனீச: சாச்வதஸ்திர: |பூசயோ பூஷணோ பூதிர்விசோக: சோகநாசன: || 67 ||
அர்சிஷ்மானர்சித: கும்போ விசுத்தாத்மா விசோதன: |அநிருத்தோப்ரதிரத: ப்ரத்யும்னோமிதவிக்ரம: || 68 ||
காலனேமினிஹா வீர: சௌரி: சூரஜனேச்வர: |த்ரிலோகாத்மா த்ரிலோகேச: கேசவ: கேசிஹா ஹரி: || 69 ||
காமதேவ: காமபால: காமீ காந்த: க்ருதாகம: |அநிர்தேச்யவபுர்விஷ்ணுர்வீரோனந்தோ தனஞ்ஜய: || 70 ||
ப்ரஹ்மண்யோ ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா ப்ரஹ்ம ப்ரஹ்மவிவர்தன: |ப்ரஹ்மவித் ப்ராஹ்மணோ ப்ரஹ்மீ ப்ரஹ்மக்ஞோ ப்ராஹ்மணப்ரிய: || 71 ||
மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக: |மஹாக்ரதுர்மஹாயஜ்வா மஹாயக்ஞோ மஹாஹவி: || 72 ||
ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: |பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரநாமய: || 73 ||
மனோஜவஸ்தீர்தகரோ வஸுரேதா வஸுப்ரத: |வஸுப்ரதோ வாஸுதேவோ வஸுர்வஸுமனா ஹவி: || 74 ||
ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்பூதி: ஸத்பராயண: |சூரஸேனோ யதுச்ரேஷ்ட: ஸந்நிவாஸ: ஸுயாமுன: || 75 ||
பூதாவாஸோ வாஸுதேவ: ஸர்வாஸுநிலயோனல: |தர்பஹா தர்பதோ த்ருப்தோ துர்தரோதாபராஜித: || 76 ||
விச்வமூர்திர்மஹாமூர்திர்தீப்தமூர்திரமூர்திமான் |அனேகமூர்திரவ்யக்த: சதமூர்தி: சதானன: || 77 ||
ஏகோ நைக: ஸவ: க: கிம் யத் தத்பதமனுத்தமம் |லோகபந்துர்லோகநாதோ மாதவோ பக்தவத்ஸல: || 78 ||
ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ வராங்கச்சந்தனாங்கதீ |வீரஹா விஷம: சூன்யோ க்ருதாசீரசலச்சல: || 79 ||
அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்ருக் |ஸுமேதா மேதஜோ தன்ய: ஸத்யமேதா தராதர: || 80 ||
தேஜோவ்ருஷோ த்யுதிதர: ஸர்வசஸ்த்ரப்ருதாம் வர: |ப்ரக்ரஹோ நிக்ரஹோ வ்யக்ரோ நைகச்ருங்கோ கதாக்ரஜ: || 81 ||
சதுர்மூர்திச்சதுர்பாஹுச்சதுர்வ்யூஹச்சதுர்கதி: |சதுராத்மா சதுர்பாவச்சதுர்வேதவிதேகபாத் || 82 ||
ஸமாவர்தோநிவ்ருத்தாத்மா துர்ஜயோ துரதிக்ரம: |துர்லபோ துர்கமோ துர்கோ துராவாஸோ துராரிஹா || 83 ||
சுபாங்கோ லோகஸாரங்க: ஸுதந்துஸ்தந்துவர்தன: |இந்த்ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாகம: || 84 ||
உத்பவ: ஸுந்தர: ஸுந்தோ ரத்னநாப: ஸுலோசன: |அர்கோ வாஜஸன: ச்ருங்கீ ஜயந்த: ஸர்வவிஜ்ஜயீ || 85 ||
ஸுவர்ணபிந்துரக்ஷோப்ய: ஸர்வவாகீச்வரேச்வர: |மஹாஹ்ரதோ மஹாகர்தோ மஹாபூதோ மஹாநிதி: || 86 ||
குமுத: குந்தர: குந்த: பர்ஜன்ய: பாவனோனில: |அம்ருதாம்சோம்ருதவபு: ஸர்வக்ஞ: ஸர்வதோமுக: || 87 ||
ஸுலப: ஸுவ்ரத: ஸித்த: சத்ருஜிச்சத்ருதாபன: |ந்யக்ரோதோதும்பரோச்வத்தச்சாணூராந்த்ரநிஷூதன: || 88 ||
ஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா: ஸப்தவாஹன: |அமூர்திரனகோசிந்த்யோ பயக்ருத்பயநாசன: || 89 ||
அணுர்ப்ருஹத்க்ருச: ஸ்தூலோ குணப்ருந்நிர்குணோ மஹான் |அத்ருத: ஸ்வத்ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்வம்சோ வம்சவர்தன: || 90 ||
பாரப்ருத் கதிதோ யோகீ யோகீச: ஸர்வகாமத: |ஆச்ரம: ச்ரமண: க்ஷாம: ஸுபர்ணோ வாயுவாஹன: || 91 ||
தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தம: |அபராஜித: ஸர்வஸஹோ நியந்தாநியமோயம: || 92 ||
ஸத்த்வவான் ஸாத்த்விக: ஸத்ய: ஸத்யதர்மபராயண: |அபிப்ராய: ப்ரியார்ஹோர்ஹ: ப்ரியக்ருத் ப்ரீதிவர்தன: || 93 ||
விஹாயஸகதிர்ஜ்யோதி: ஸுருசிர்ஹுதபுக்விபு: |ரவிர்விரோசன: ஸூர்ய: ஸவிதா ரவிலோசன: || 94 ||
அனந்தோ ஹுதபுக்போக்தா ஸுகதோ நைகஜோக்ரஜ: |அநிர்விண்ண: ஸதாமர்ஷீ லோகாதிஷ்டானமத்புத: || 95 ||
ஸனாத்ஸனாதனதம: கபில: கபிரவ்யய: |ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத்ஸ்வஸ்தி ஸ்வஸ்திபுக்ஸ்வஸ்திதக்ஷிண: || 96 ||
அரௌத்ர: குண்டலீ சக்ரீ விக்ரம்யூர்ஜிதசாஸன: |சப்தாதிக: சப்தஸஹ: சிசிர: சர்வரீகர: || 97 ||
அக்ரூர: பேசலோ தக்ஷோ தக்ஷிண: க்ஷமிணாம்வர: |வித்வத்தமோ வீதபய: புண்யச்ரவணகீர்தன: || 98 ||
உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ து:ஸ்வப்னநாசன: |வீரஹா ரக்ஷண: ஸந்தோ ஜீவன: பர்யவஸ்தித: || 99 ||
அனந்தரூபோனந்தஸ்ரீர்ஜிதமன்யுர்பயாபஹ: |சதுரச்ரோ கபீராத்மா விதிசோ வ்யாதிசோ திச: || 100 ||
அநாதிர்பூர்புவோ லக்ஷ்மீ: ஸுவீரோ ருசிராங்கத: |ஜனனோ ஜனஜன்மாதிர்பீமோ பீமபராக்ரம: || 101 ||
ஆதாரநிலயோதாதா புஷ்பஹாஸ: ப்ரஜாகர: |ஊர்த்வக: ஸத்பதாசார: ப்ராணத: ப்ரணவ: பண: || 102 ||
ப்ரமாணம் ப்ராணநிலய: ப்ராணப்ருத்ப்ராணஜீவன: |தத்த்வம் தத்த்வவிதேகாத்மா ஜன்மம்ருத்யுஜராதிக: || 103 ||
பூர்புவ:ஸ்வஸ்தருஸ்தார: ஸவிதா ப்ரபிதாமஹ: |யக்ஞோ யக்ஞபதிர்யஜ்வா யக்ஞாங்கோ யக்ஞவாஹன: || 104 ||
யக்ஞப்ருத் யக்ஞக்ருத் யக்ஞீ யக்ஞபுக் யக்ஞஸாதன: |யக்ஞாந்தக்ருத் யக்ஞகுஹ்யமன்னமந்நாத ஏவ ச || 105 ||
ஆத்மயோனி: ஸ்வயஞ்ஜாதோ வைகான: ஸாமகாயன: |தேவகீநந்தன: ஸ்ரஷ்டா க்ஷிதீச: பாபநாசன: || 106 ||
சங்கப்ருன்னந்தகீ சக்ரீ சார்ங்கதன்வா கதாதர: |ரதாங்கபாணிரக்ஷோப்ய: ஸர்வப்ரஹரணாயுத: || 107 ||
ஸர்வப்ரஹரணாயுத ௐ நம இதி |வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ |ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர்வாஸுதேவோபிரக்ஷது || 108 ||
ஸ்ரீவாஸுதேவோபிரக்ஷது ௐ நம இதி |
உத்தரந்யாஸ:
பீஷ்ம உவாச ---இதீதம் கீர்தனீயஸ்ய கேசவஸ்ய மஹாத்மன: |நாம்னாம் ஸஹஸ்ரம் திவ்யாநாமசேஷேண ப்ரகீர்திதம் || 1 ||
ய இதம் ச்ருணுயாந்நித்யம் யச்சாபி பரிகீர்தயேத் |நாசுபம் ப்ராப்னுயாத்கிஞ்சித்ஸோமுத்ரேஹ ச மானவ: || 2 ||
வேதாந்தகோ ப்ராஹ்மண: ஸ்யாத்க்ஷத்ரியோ விஜயீ பவேத் |வைச்யோ தனஸம்ருத்த: ஸ்யாச்சூத்ர: ஸுகமவாப்னுயாத் || 3 ||
தர்மார்தீ ப்ராப்னுயாத்தர்மமர்தார்தீ சார்தமாப்னுயாத் |காமானவாப்னுயாத்காமீ ப்ரஜார்தீ சாப்னுயாத்ப்ரஜாம் || 4 ||
பக்திமான் ய: ஸதோத்தாய சுசிஸ்தத்கதமானஸ: |ஸஹஸ்ரம் வாஸுதேவஸ்ய நாம்நாமேதத்ப்ரகீர்தயேத் || 5 ||
யச: ப்ராப்னோதி விபுலம் ஞாதிப்ராதான்யமேவ ச |அசலாம் ச்ரியமாப்னோதி ச்ரேய: ப்ராப்னோத்யனுத்தமம் || 6 ||
ந பயம் க்வசிதாப்னோதி வீர்யம் தேஜச்ச விந்ததி |பவத்யரோகோ த்யுதிமான்பலரூபகுணான்வித: || 7 ||
ரோகார்தோ முச்யதே ரோகாத்பத்தோ முச்யேத பந்தனாத் |பயான்முச்யேத பீதஸ்து முச்யேதாபன்ன ஆபத: || 8 ||
துர்காண்யதிதரத்யாசு புருஷ: புருஷோத்தமம் |ஸ்துவந்நாமஸஹஸ்ரேண நித்யம் பக்திஸமன்வித: || 9 ||
வாஸுதேவாச்ரயோ மர்த்யோ வாஸுதேவபராயண: |ஸர்வபாபவிசுத்தாத்மா யாதி ப்ரஹ்ம ஸனாதனம் || 10 ||
ந வாஸுதேவபக்தாநாமசுபம் வித்யதே க்வசித் |ஜன்மம்ருத்யுஜராவ்யாதிபயம் நைவோபஜாயதே || 11 ||
இமம் ஸ்தவமதீயான: ச்ரத்தாபக்திஸமன்வித: |யுஜ்யேதாத்மஸுகக்ஷாந்திஸ்ரீத்ருதிஸ்ம்ருதிகீர்திபி: || 12 ||
ந க்ரோதோ ந ச மாத்ஸர்யம் ந லோபோ நாசுபா மதி: |பவந்தி க்ருதபுண்யானாம் பக்தானாம் புருஷோத்தமே || 13 ||
த்யௌ: ஸசந்த்ரார்கநக்ஷத்ரா கம் திசோ பூர்மஹோததி: |வாஸுதேவஸ்ய வீர்யேண வித்ருதானி மஹாத்மன: || 14 ||
ஸஸுராஸுரகந்தர்வம் ஸயக்ஷோரகராக்ஷஸம் |ஜகத்வசே வர்ததேதம் க்ருஷ்ணஸ்ய ஸசராசரம் || 15 ||
இந்த்ரியாணி மனோ புத்தி: ஸத்த்வம் தேஜோ பலம் த்ருதி: |வாஸுதேவாத்மகான்யாஹு: க்ஷேத்ரம் க்ஷேத்ரக்ஞ ஏவ ச || 16 ||
ஸர்வாகமாநாமாசார: ப்ரதமம் பரிகல்ப்யதே |ஆசாரப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபுரச்யுத: || 17 ||
ருஷய: பிதரோ தேவா மஹாபூதானி தாதவ: |ஜங்கமாஜங்கமம் சேதம் ஜகந்நாராயணோத்பவம் || 18 ||
யோகோ ஞானம் ததா ஸாங்க்யம் வித்யா: சில்பாதிகர்ம ச |வேதா: சாஸ்த்ராணி விக்ஞானமேதத்ஸர்வம் ஜனார்தனாத் || 19 ||
ஏகோ விஷ்ணுர்மஹத்பூதம் ப்ருதக்பூதான்யனேகச: |த்ரீம்ல்லோகான்வ்யாப்ய பூதாத்மா புங்க்தே விச்வபுகவ்யய: || 20 ||
இமம் ஸ்தவம் பகவதோ விஷ்ணோர்வ்யாஸேன கீர்திதம் |படேத்ய இச்சேத்புருஷ: ச்ரேய: ப்ராப்தும் ஸுகானி ச || 21 ||
விச்வேச்வரமஜம் தேவம் ஜகத: ப்ரபுமவ்யயம் |பஜந்தி யே புஷ்கராக்ஷம் ந தே யாந்தி பராபவம் || 22 ||
ந தே யாந்தி பராபவம் ௐ நம இதி |அர்ஜுன உவாச |பத்மபத்ரவிசாலாக்ஷ பத்மநாப ஸுரோத்தம |பக்தாநாமனுரக்தானாம் த்ராதா பவ ஜனார்தன || 23 ||
ஸ்ரீபகவானுவாச |யோ மாம் நாமஸஹஸ்ரேண ஸ்தோதுமிச்சதி பாண்டவ |ஸோஹமேகேன ச்லோகேன ஸ்துத ஏவ ந ஸம்சய: || 24 ||
ஸ்துத ஏவ ந ஸம்சய ௐ நம இதி |வ்யாஸ உவாச |வாஸநாத்வாஸுதேவஸ்ய வாஸிதம் புவனத்ரயம் |ஸர்வபூதநிவாஸோஸி வாஸுதேவ நமோஸ்து தே || 25 ||
ஸ்ரீவாஸுதேவ நமோஸ்து த ௐ நம இதி |பார்வத்யுவாச |கேனோபாயேன லகுனா விஷ்ணோர்நாமஸஹஸ்ரகம் |பட்யதே பண்டிதைர்நித்யம் ச்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ || 26 ||
ஈச்வர உவாச |ராமராமேதி ராமேதி ரமே ராமே மனோரமே |ஸஹஸ்ரநாமதத்துல்யம் ராமநாம வரானனே || 27 ||
ஸ்ரீராமநாம வரானன ௐ நம இதி |ப்ரஹ்மோவாச |நமோஸ்த்வனந்தாய ஸஹஸ்ரமூர்தயேஸஹஸ்ரபாதாக்ஷிசிரோருபாஹவே |ஸஹஸ்ரநாம்னே புருஷாய சாச்வதேஸஹஸ்ரகோடியுகதாரிணே நம: || 28 ||
ஸஹஸ்ரகோடியுகதாரிணே நம ௐ நம இதி |ஸஞ்ஜய உவாச ---யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: |தத்ர ஸ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம || 29 ||
ஸ்ரீபகவானுவாச ---அனன்யாச்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே |தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் || 30 ||
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |தர்மஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே || 31 ||
ஆர்தா விஷண்ணா: சிதிலாச்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷு வர்தமானா: |ஸங்கீர்த்ய நாராயணசப்தமாத்ரம் விமுக்தது:கா: ஸுகினோ பவந்து || 32 ||
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதிஸ்வபாவாத் |கரோமி யத்யத்ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்பயாமி || 33 ||
இதி ஸ்ரீவிஷ்ணோர்திவ்யஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||
|| ௐ தத்ஸதிதி ||
உபஸம்ஹாரச்லோகா:
ௐ ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம் |லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||
ஆர்தாநாமார்திஹந்தாரம் பீதானாம் பீதிநாசனம் |த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||
நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச |கண்டிதாகிலதைத்யாய ராமாயாபந்நிவாரிணே ||
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே |ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||
அக்ரத: ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ |ஆகர்ணபூர்ணதன்வானௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||
ஸன்னத்த: கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா |கச்சன்மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸலக்ஷ்மண: ||
அச்யுதானந்தகோவிந்தநாமோச்சாரணபேஷஜாத் |நச்யந்தி ஸகலா ரோகாஸ்ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||
ஸத்யம் ஸத்யம் புனஸ்ஸத்யமுத்த்ருத்ய புஜமுச்யதே |வேதாச்சாஸ்த்ரம் பரம் நாஸ்தி ந தேவ: கேசவாத்பர: ||
சரீரே ஜர்ஜ்ஜரீபூதே வ்யாதிக்ரஸ்தே கலேவரே |ஔஷதம் ஜாஹ்னவீதோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||
ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |இதமேகம் ஸுநிஷ்பன்னம் த்யேயோ நாராயணோ ஹரி: ||
யதக்ஷரபதப்ரஷ்டம் மாத்ராஹீனம் து யத்பவேத் |தத்ஸர்வ க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்து தே ||
விஸர்கபிந்துமாத்ராணி பதபாதாக்ஷராணி ச |ந்யூனானி சாதிரிக்தானி க்ஷமஸ்வ புருஷோத்தம ||
பர்யாயோபஸம்ஹாரச்லோகா:
நம: கமலநாபாய நமஸ்தே ஜலசாயினே |நமஸ்தே கேசவானந்த வாஸுதேவ நமோஸ்துதே ||
நமோ ப்ரஹ்மண்யதேவாய கோப்ராஹ்மணஹிதாய ச |ஜகத்திதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: ||
ஆகாசாத்பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் |ஸர்வதேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி ||
ஏஷ நிஷ்கண்டக: பந்தா யத்ர ஸம்பூஜ்யதே ஹரி: |குபதம் தம் விஜானீயாத் கோவிந்தரஹிதாகமம் ||
ஸர்வவேதேஷு யத்புண்யம் ஸர்வதீர்தேஷு யத்பலம் |தத்பலம் ஸமவாப்னோதி ஸ்துத்வா தேவம் ஜனார்தனம் ||
யோ நர: படதே நித்யம் த்ரிகாலம் கேசவாலயே |த்விகாலமேககாலம் வா க்ரூரம் ஸர்வம் வ்யபோஹதி ||
தஹ்யந்தே ரிபவஸ்தஸ்ய ஸௌம்யா: ஸர்வே ஸதா க்ரஹா: |விலீயந்தே ச பாபானி ஸ்தவே ஹ்யஸ்மின் ப்ரகீர்திதே ||
யேன த்யாத: ச்ருதோ யேன யேனாயம் பட்யதே ஸ்தவ: |தத்தானி ஸர்வதானானி ஸுரா: ஸர்வே ஸமர்சிதா: ||
இஹ லோகே பரே வாபி ந பயம் வித்யதே க்வசித் |நாம்னாம் ஸஹஸ்ரம் யோதீதே த்வாதச்யாம் மம ஸந்நிதௌ ||
சனைர்தஹந்தி பாபானி கல்பகோடிசதானி ச |அச்வத்தஸந்நிதௌ பார்த த்யாத்வா மனஸி கேசவம் ||
படேந்நாமஸஹஸ்ரம் து கவாம் கோடிபலம் லபேத் |சிவாலயே படேநித்யம் துலஸீவனஸம்ஸ்தித: ||
நரோ முக்திமவாப்னோதி சக்ரபாணேர்வசோ யதா |ப்ரஹ்மஹத்யாதிகம் கோரம் ஸர்வபாபம் வினச்யதி ||
விலயம் யாந்தி பாபானி சான்யபாபஸ்ய கா கதா |ஸர்வபாபவிநிர்முக்தோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி ||
|| ஹரி: ௐ தத்ஸத் ||
பொருள் / விளக்கம்
குருக்ஷேத்திரப் போருக்குப் பின், அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் யுதிஷ்டிரர் "உலகில் ஒரே தெய்வம் எது? எதை ஜபித்தால் பிறவித் தளையிலிருந்து விடுபடலாம்?" என்று கேட்க, பீஷ்மர் உபதேசித்தது இந்த ஸஹஸ்ரநாமம்.
அமைப்பு: பூர்வ பாகம் (தியான ஸ்லோகங்கள், யுதிஷ்டிரரின் கேள்விகள், ந்யாஸம், தியானம்), 108 ஸ்லோகங்களில் ஆயிரம் திருநாமங்கள், உத்தர பாகம் (பலச்ருதி). "ஸ்ரீராம ராம ராமேதி" என்ற ஸ்லோகம் — ஒருமுறை ராம நாமம் சொல்வது ஸஹஸ்ரநாமம் சொன்னதற்குச் சமம் — உத்தர பாகத்தில் உள்ளது.
பாராயணம்: வியாழன், சனிக்கிழமைகள், ஏகாதசி, புரட்டாசி மாதம் சிறப்பு. ஆதி சங்கரர் முதன்முதலில் உரை எழுதிய நூல் இதுவே.