எங்களைப் பற்றி
கஜானனம் (Gajananam) — தமிழ் ஸ்லோகங்கள், கவசங்கள், திருமுறைகள், அந்தாதிகள், பாசுரங்கள் ஆகியவற்றைத் தெளிவான எழுத்துருவில், கவனச் சிதறல் இன்றிப் படிக்க உருவாக்கப்பட்ட தளம்.
தளத்தின் பெயர் "கஜானனம் பூதகணாதி ஸேவிதம்" என்ற விநாயகர் ஸ்லோகத்திலிருந்து எடுக்கப்பட்டது — எந்த நற்செயலும் விநாயகர் வணக்கத்துடன் தொடங்குவது போல.
எங்கள் நோக்கம்
- பாடல் வரிகளைச் சரியாகவும் முழுமையாகவும் வழங்குதல்.
- கைபேசியிலும் எளிதாகப் படிக்கும்படி — பெரிய எழுத்து, இரவுத் தோற்றம், அச்சிடும் வசதி.
- விளம்பரங்கள் இருந்தாலும் அவை படிப்பதற்கு இடையூறாக இருக்காது.
பாடல்களின் மூலம்
பெரும்பாலான பாடல்கள் பதிப்புரிமைக் காலம் கடந்த (public domain) நூல்கள். பாடல் வரிகள் தமிழ் விக்கிமூலம் முதலிய திறந்த மூலங்களிலிருந்து தொகுக்கப்பட்டு, ஒவ்வொரு பக்கத்திலும் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிழை கண்டால் தெரிவியுங்கள்.