ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
Sri Lalitha Sahasranamam — Lyrics in Tamil
"ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ" என்று தொடங்கும், அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் ஆயிரம் திருநாமங்கள். வெள்ளிக்கிழமைகளிலும் நவராத்திரியிலும் பாராயணம் செய்யப்படுகிறது.
Also known as: Lalitha Sahasranamam Lyrics in Tamil · Lalita Sahasranama Stotram · Sri Matha Sri Maharajni
ந்யாஸ:
அஸ்ய ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமஸ்தோத்ரமாலாமந்த்ரஸ்ய |வசின்யாதிவாக்தேவதா ருஷய: |அனுஷ்டுப்சந்த: |ஸ்ரீலலிதாபரமேச்வரீ தேவதா |ஸ்ரீமத்வாக்பவகூடேதி பீஜம் |மத்யகூடேதி சக்தி: |சக்திகூடேதி கீலகம் |ஸ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்தரீ-ப்ரஸாதஸித்தித்வாராசிந்திதபலாவாப்த்யர்தே ஜபே விநியோக: ||
த்யானம்
ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்தாராநாயகசேகராம் ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |பாணிப்யாமலிபூர்ணரத்னசஷகம் ரக்தோத்பலம் விப்ரதீம்ஸௌம்யாம் ரத்னகடஸ்தரக்தசரணாம் த்யாயேத்பராமம்பிகாம் ||
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்த்ருதபாசாங்குசபுஷ்பபாணசாபாம் |அணிமாதிபிராவ்ருதாம் மயூகை:அஹமித்யேவ விபாவயே பவானீம் ||
த்யாயேத்பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் பத்மபத்ராயதாக்ஷீம்ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேமபத்மாம் வராங்கீம் |ஸர்வாலங்காரயுக்தாம் ஸததமபயதாம் பக்தனம்ராம் பவானீம்ஸ்ரீவித்யாம் சாந்தமூர்திம் ஸகலஸுரனுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||
ஸகுங்குமவிலேபநாமலிகசும்பிகஸ்தூரிகாம்ஸமந்தஹஸிதேக்ஷணாம் ஸசரசாபபாசாங்குசாம் |அசேஷஜநமோஹினீமருணமால்யபூஷாம்பராம்ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||
ஸ்ரீலலிதாஸஹஸ்ரநாமஸ்தோத்ரம்
ௐ ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராக்ஞீ ஸ்ரீமத்-ஸிம்ஹாஸனேச்வரீ |சிதக்னி-குண்ட-ஸம்பூதா தேவகார்ய-ஸமுத்யதா || 1 ||
உத்யத்பானு-ஸஹஸ்ராபா சதுர்பாஹு-ஸமன்விதா |ராகஸ்வரூப-பாசாட்யா க்ரோதாகாராங்குசோஜ்ஜ்வலா || 2 ||
மனோரூபேக்ஷு-கோதண்டா பஞ்சதன்மாத்ர-ஸாயகா |நிஜாருண-ப்ரபாபூர-மஜ்ஜத்ப்ரஹ்மாண்ட-மண்டலா || 3 ||
சம்பகாசோக-புந்நாக-ஸௌகந்திக-லஸத்கசா |குருவிந்தமணி-ச்ரேணீ-கனத்கோடீர-மண்டிதா || 4 ||
அஷ்டமீசந்த்ர-விப்ராஜ-தலிகஸ்தல-சோபிதா |முகசந்த்ர-கலங்காப-ம்ருகநாபி-விசேஷகா || 5 ||
வதனஸ்மர-மாங்கல்ய-க்ருஹதோரண-சில்லிகா |வக்த்ரலக்ஷ்மீ-பரீவாஹ-சலன்மீநாப-லோசனா || 6 ||
நவசம்பக-புஷ்பாப-நாஸாதண்ட-விராஜிதா |தாராகாந்தி-திரஸ்காரி-நாஸாபரண-பாஸுரா || 7 ||
கதம்பமஞ்ஜரீ-க்லுப்த-கர்ணபூர-மனோஹரா |தாடங்க-யுகலீ-பூத-தபனோடுப-மண்டலா || 8 ||
பத்மராக-சிலாதர்ச-பரிபாவி-கபோலபூ: |நவவித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-ரதனச்சதா || 9 ||
சுத்த-வித்யாங்குராகார-த்விஜபங்க்தி-த்வயோஜ்ஜ்வலா |கர்பூர-வீடிகாமோத-ஸமாகர்ஷி-திகந்தரா || 10 ||
நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்பர்த்ஸித-கச்சபீ |மந்தஸ்மித-ப்ரபாபூர-மஜ்ஜத்காமேச-மானஸா || 11 ||
அனாகலித-ஸாத்ருச்ய-சிபுகஸ்ரீ-விராஜிதா |காமேச-பத்த-மாங்கல்ய-ஸூத்ர-சோபித-கந்தரா || 12 ||
கனகாங்கத-கேயூர-கமனீய-புஜான்விதா |ரத்னக்ரைவேய-சிந்தாக-லோல-முக்தா-பலான்விதா || 13 ||
காமேச்வர-ப்ரேமரத்ன-மணி-ப்ரதிபண-ஸ்தனீ |நாப்யாலவால-ரோமாலி-லதா-பல-குசத்வயீ || 14 ||
லக்ஷ்யரோம-லதாதாரதா-ஸமுன்னேய-மத்யமா |ஸ்தனபார-தலன்மத்ய-பட்டபந்த-வலித்ரயா || 15 ||
அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்-கடீதடீ |ரத்ன-கிங்கிணிகா-ரம்ய-ரசனா-தாம-பூஷிதா || 16 ||
காமேச-ஞாத-ஸௌபாக்ய-மார்தவோரு-த்வயான்விதா |மாணிக்ய-முகுடாகார-ஜானுத்வய-விராஜிதா || 17 ||
இந்த்ரகோப-பரிக்ஷிப்த-ஸ்மரதூணாப-ஜங்கிகா |கூடகுல்பா கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா || 18 ||
நக-தீதிதி-ஸஞ்சன்ன-நமஜ்ஜன-தமோகுணா |பதத்வய-ப்ரபாஜால-பராக்ருத-ஸரோருஹா || 19 ||
ஸிஞ்ஜான-மணிமஞ்ஜீர-மண்டித-ஸ்ரீ-பதாம்புஜா |மராலீ-மந்தகமனா மஹாலாவண்ய-சேவதி: || 20 ||
ஸர்வாருணானவத்யாங்கீ ஸர்வாபரண-பூஷிதா |சிவ-காமேச்வராங்கஸ்தா சிவா ஸ்வாதீன-வல்லபா || 21 ||
ஸுமேரு-மத்ய-ச்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா |சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸன-ஸ்திதா || 22 ||
மஹாபத்மாடவீ-ஸம்ஸ்தா கதம்பவன-வாஸினீ |ஸுதாஸாகர-மத்யஸ்தா காமாக்ஷீ காமதாயினீ || 23 ||
தேவர்ஷி-கண-ஸங்காத-ஸ்தூயமானாத்ம-வைபவா |பண்டாஸுர-வதோத்யுக்த-சக்திஸேனா-ஸமன்விதா || 24 ||
ஸம்பத்கரீ-ஸமாரூட-ஸிந்துர-வ்ரஜ-ஸேவிதா |அச்வாரூடாதிஷ்டிதாச்வ-கோடி-கோடிபிராவ்ருதா || 25 ||
சக்ரராஜ-ரதாரூட-ஸர்வாயுத-பரிஷ்க்ருதா |கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிஸேவிதா || 26 ||
கிரிசக்ர-ரதாரூட-தண்டநாதா-புரஸ்க்ருதா |ஜ்வாலா-மாலினிகாக்ஷிப்த-வஹ்னிப்ராகார-மத்யகா || 27 ||
பண்டஸைன்ய-வதோத்யுக்த-சக்தி-விக்ரம-ஹர்ஷிதா |நித்யா-பராக்ரமாடோப-நிரீக்ஷண-ஸமுத்ஸுகா || 28 ||
பண்டபுத்ர-வதோத்யுக்த-பாலா-விக்ரம-நந்திதா |மந்த்ரிண்யம்பா-விரசித-விஷங்க-வத-தோஷிதா || 29 ||
விசுக்ர-ப்ராணஹரண-வாராஹீ-வீர்ய-நந்திதா |காமேச்வர-முகாலோக-கல்பித-ஸ்ரீகணேச்வரா || 30 ||
மஹாகணேச-நிர்பின்ன-விக்னயந்த்ர-ப்ரஹர்ஷிதா |பண்டாஸுரேந்த்ர-நிர்முக்த-சஸ்த்ர-ப்ரத்யஸ்த்ர-வர்ஷிணீ || 31 ||
கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருதி: |மஹா-பாசுபதாஸ்த்ராக்னி-நிர்தக்தாஸுர-ஸைனிகா || 32 ||
காமேச்வராஸ்த்ர-நிர்தக்த-ஸபண்டாஸுர-சூன்யகா |ப்ரஹ்மோபேந்த்ர-மஹேந்த்ராதி-தேவ-ஸம்ஸ்துத-வைபவா || 33 ||
ஹர-நேத்ராக்னி-ஸந்தக்த-காம-ஸஞ்ஜீவனௌஷதி: |ஸ்ரீமத்வாக்பவ-கூடைக-ஸ்வரூப-முக-பங்கஜா || 34 ||
கண்டாத:-கடி-பர்யந்த-மத்யகூட-ஸ்வரூபிணீ |சக்தி-கூடைகதாபன்ன-கட்யதோபாக-தாரிணீ || 35 ||
மூல-மந்த்ராத்மிகா மூலகூடத்ரய-கலேவரா |குலாம்ருதைக-ரஸிகா குலஸங்கேத-பாலினீ || 36 ||
குலாங்கனா குலாந்தஸ்தா கௌலினீ குலயோகினீ |அகுலா ஸமயாந்தஸ்தா ஸமயாசார-தத்பரா || 37 ||
மூலாதாரைக-நிலயா ப்ரஹ்மக்ரந்தி-விபேதினீ |மணி-பூராந்தருதிதா விஷ்ணுக்ரந்தி-விபேதினீ || 38 ||
ஆக்ஞா-சக்ராந்தராலஸ்தா ருத்ரக்ரந்தி-விபேதினீ |ஸஹஸ்ராராம்புஜாரூடா ஸுதா-ஸாராபிவர்ஷிணீ || 39 ||
தடில்லதா-ஸமருசி: ஷட்சக்ரோபரி-ஸம்ஸ்திதா |மஹாஸக்தி: குண்டலினீ பிஸதந்து-தனீயஸீ || 40 ||
பவானீ பாவநாகம்யா பவாரண்ய-குடாரிகா |பத்ரப்ரியா பத்ரமூர்திர்பக்த-ஸௌபாக்யதாயினீ || 41 ||
பக்திப்ரியா பக்திகம்யா பக்திவச்யா பயாபஹா |சாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயினீ || 42 ||
சாங்கரீ ஸ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர-நிபானனா |சாதோதரீ சாந்திமதீ நிராதாரா நிரஞ்ஜனா || 43 ||
நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா |நிர்குணா நிஷ்கலா சாந்தா நிஷ்காமா நிருபப்லவா || 44 ||
நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா |நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா || 45 ||
நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர்நிரீச்வரா |நீராகா ராகமதனீ நிர்மதா மதநாசினீ || 46 ||
நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ |நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ || 47 ||
நிஷ்க்ரோதா க்ரோதசமனீ நிர்லோபா லோபநாசினீ |நி:ஸம்சயா ஸம்சயக்னீ நிர்பவா பவநாசினீ || 48 ||
நிர்விகல்பா நிராபாதா நிர்பேதா பேதநாசினீ |நிர்நாசா ம்ருத்யுமதனீ நிஷ்க்ரியா நிஷ்பரிக்ரஹா || 49 ||
நிஸ்துலா நீலசிகுரா நிரபாயா நிரத்யயா |துர்லபா துர்கமா துர்கா து:கஹந்த்ரீ ஸுகப்ரதா || 50 ||
துஷ்டதூரா துராசார-சமனீ தோஷவர்ஜிதா |ஸர்வக்ஞா ஸாந்த்ரகருணா ஸமானாதிக-வர்ஜிதா || 51 ||
ஸர்வசக்திமயீ ஸர்வ-மங்கலா ஸத்கதிப்ரதா |ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வமந்த்ர-ஸ்வரூபிணீ || 52 ||
ஸர்வ-யந்த்ராத்மிகா ஸர்வ-தந்த்ரரூபா மனோன்மனீ |மாஹேச்வரீ மஹாதேவீ மஹாலக்ஷ்மீர்ம்ருடப்ரியா || 53 ||
மஹாரூபா மஹாபூஜ்யா மஹாபாதக-நாசினீ |மஹாமாயா மஹாஸத்த்வா மஹாசக்திர்மஹாரதி: || 54 ||
மஹாபோகா மஹைச்வர்யா மஹாவீர்யா மஹாபலா |மஹாபுத்திர்மஹாஸித்திர்மஹாயோகேச்வரேச்வரீ || 55 ||
மஹாதந்த்ரா மஹாமந்த்ரா மஹாயந்த்ரா மஹாஸனா |மஹாயாக-க்ரமாராத்யா மஹாபைரவ-பூஜிதா || 56 ||
மஹேச்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ-ஸாக்ஷிணீ |மஹாகாமேச-மஹிஷீ மஹாத்ரிபுர-ஸுந்தரீ || 57 ||
சது:ஷஷ்ட்யுபசாராட்யா சது:ஷஷ்டிகலாமயீ |மஹாசது:-ஷஷ்டிகோடி-யோகினீ-கணஸேவிதா || 58 ||
மனுவித்யா சந்த்ரவித்யா சந்த்ரமண்டல-மத்யகா |சாருரூபா சாருஹாஸா சாருசந்த்ர-கலாதரா || 59 ||
சராசர-ஜகந்நாதா சக்ரராஜ-நிகேதனா |பார்வதீ பத்மநயனா பத்மராக-ஸமப்ரபா || 60 ||
பஞ்ச-ப்ரேதாஸனாஸீனா பஞ்சப்ரஹ்ம-ஸ்வரூபிணீ |சின்மயீ பரமானந்தா விக்ஞான-கனரூபிணீ || 61 ||
த்யான-த்யாத்ரு-த்யேயரூபா தர்மாதர்ம-விவர்ஜிதா |விச்வரூபா ஜாகரிணீ ஸ்வபந்தீ தைஜஸாத்மிகா || 62 ||
ஸுப்தா ப்ராக்ஞாத்மிகா துர்யா ஸர்வாவஸ்தா-விவர்ஜிதா |ஸ்ருஷ்டிகர்த்ரீ ப்ரஹ்மரூபா கோப்த்ரீ கோவிந்தரூபிணீ || 63 ||
ஸம்ஹாரிணீ ருத்ரரூபா திரோதான-கரீச்வரீ |ஸதாசிவானுக்ரஹதா பஞ்சக்ருத்ய-பராயணா || 64 ||
பானுமண்டல-மத்யஸ்தா பைரவீ பகமாலினீ |பத்மாஸனா பகவதீ பத்மநாப-ஸஹோதரீ || 65 ||
உன்மேஷ-நிமிஷோத்பன்ன-விபன்ன-புவனாவலீ |ஸஹஸ்ர-சீர்ஷவதனா ஸஹஸ்ராக்ஷீ ஸஹஸ்ரபாத் || 66 ||
ஆப்ரஹ்ம-கீட-ஜனனீ வர்ணாச்ரம-விதாயினீ |நிஜாக்ஞாரூப-நிகமா புண்யாபுண்ய-பலப்ரதா || 67 ||
ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரீ-க்ருத-பாதாப்ஜ-தூலிகா |ஸகலாகம-ஸந்தோஹ-சுக்தி-ஸம்புட-மௌக்திகா || 68 ||
புருஷார்தப்ரதா பூர்ணா போகினீ புவனேச்வரீ |அம்பிகாநாதி-நிதனா ஹரிப்ரஹ்மேந்த்ர-ஸேவிதா || 69 ||
நாராயணீ நாதரூபா நாமரூப-விவர்ஜிதா |ஹ்ரீங்காரீ ஹ்ரீமதீ ஹ்ருத்யா ஹேயோபாதேய-வர்ஜிதா || 70 ||
ராஜராஜார்சிதா ராக்ஞீ ரம்யா ராஜீவலோசனா |ரஞ்ஜனீ ரமணீ ரஸ்யா ரணத்கிங்கிணி-மேகலா || 71 ||
ரமா ராகேந்துவதனா ரதிரூபா ரதிப்ரியா |ரக்ஷாகரீ ராக்ஷஸக்னீ ராமா ரமணலம்படா || 72 ||
காம்யா காமகலாரூபா கதம்ப-குஸும-ப்ரியா |கல்யாணீ ஜகதீகந்தா கருணா-ரஸ-ஸாகரா || 73 ||
கலாவதீ கலாலாபா காந்தா காதம்பரீப்ரியா |வரதா வாமநயனா வாருணீ-மத-விஹ்வலா || 74 ||
விச்வாதிகா வேதவேத்யா விந்த்யாசல-நிவாஸினீ |விதாத்ரீ வேதஜனனீ விஷ்ணுமாயா விலாஸினீ || 75 ||
க்ஷேத்ரஸ்வரூபா க்ஷேத்ரேசீ க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞ-பாலினீ |க்ஷயவ்ருத்தி-விநிர்முக்தா க்ஷேத்ரபால-ஸமர்சிதா || 76 ||
விஜயா விமலா வந்த்யா வந்தாரு-ஜன-வத்ஸலா |வாக்வாதினீ வாமகேசீ வஹ்னிமண்டல-வாஸினீ || 77 ||
பக்திமத்-கல்பலதிகா பசுபாச-விமோசினீ |ஸம்ஹ்ருதாசேஷ-பாஷண்டா ஸதாசார-ப்ரவர்திகா || 78 ||
தாபத்ரயாக்னி-ஸந்தப்த-ஸமாஹ்லாதன-சந்த்ரிகா |தருணீ தாபஸாராத்யா தனுமத்யா தமோபஹா || 79 ||
சிதிஸ்தத்பத-லக்ஷ்யார்தா சிதேகரஸ-ரூபிணீ |ஸ்வாத்மானந்த-லவீபூத-ப்ரஹ்மாத்யானந்த-ஸந்ததி: || 80 ||
பரா ப்ரத்யக்சிதீரூபா பச்யந்தீ பரதேவதா |மத்யமா வைகரீரூபா பக்த-மானஸ-ஹம்ஸிகா || 81 ||
காமேச்வர-ப்ராணநாடீ க்ருதக்ஞா காமபூஜிதா |ச்ருங்கார-ரஸ-ஸம்பூர்ணா ஜயா ஜாலந்தர-ஸ்திதா || 82 ||
ஓட்யாணபீட-நிலயா பிந்து-மண்டலவாஸினீ |ரஹோயாக-க்ரமாராத்யா ரஹஸ்தர்பண-தர்பிதா || 83 ||
ஸத்ய:ப்ரஸாதினீ விச்வ-ஸாக்ஷிணீ ஸாக்ஷிவர்ஜிதா |ஷடங்கதேவதா-யுக்தா ஷாட்குண்ய-பரிபூரிதா || 84 ||
நித்யக்லின்னா நிருபமா நிர்வாண-ஸுக-தாயினீ |நித்யா-ஷோடசிகா-ரூபா ஸ்ரீகண்டார்த-சரீரிணீ || 85 ||
ப்ரபாவதீ ப்ரபாரூபா ப்ரஸித்தா பரமேச்வரீ |மூலப்ரக்ருதிரவ்யக்தா வ்யக்தாவ்யக்த-ஸ்வரூபிணீ || 86 ||
வ்யாபினீ விவிதாகாரா வித்யாவித்யா-ஸ்வரூபிணீ |மஹாகாமேச-நயன-குமுதாஹ்லாத-கௌமுதீ || 87 ||
பக்த-ஹார்த-தமோபேத-பானுமத்பானு-ஸந்ததி: |சிவதூதீ சிவாராத்யா சிவமூர்தி: சிவங்கரீ || 88 ||
சிவப்ரியா சிவபரா சிஷ்டேஷ்டா சிஷ்டபூஜிதா |அப்ரமேயா ஸ்வப்ரகாசா மனோவாசாமகோசரா || 89 ||
சிச்சக்திச் சேதனாரூபா ஜடசக்திர்ஜடாத்மிகா |காயத்ரீ வ்யாஹ்ருதி: ஸந்த்யா த்விஜவ்ருந்த-நிஷேவிதா || 90 ||
தத்த்வாஸனா தத்த்வமயீ பஞ்ச-கோசாந்தர-ஸ்திதா |நி:ஸீம-மஹிமா நித்ய-யௌவனா மதசாலினீ || 91 ||
மதகூர்ணித-ரக்தாக்ஷீ மதபாடல-கண்டபூ: |சந்தன-த்ரவ-திக்தாங்கீ சாம்பேய-குஸும-ப்ரியா || 92 ||
குசலா கோமலாகாரா குருகுல்லா குலேச்வரீ |குலகுண்டாலயா கௌல-மார்க-தத்பர-ஸேவிதா || 93 ||
குமார-கணநாதாம்பா துஷ்டி: புஷ்டிர்மதிர்த்ருதி: |சாந்தி: ஸ்வஸ்திமதீ காந்திர்னந்தினீ விக்னநாசினீ || 94 ||
தேஜோவதீ த்ரிநயனா லோலாக்ஷீ-காமரூபிணீ |மாலினீ ஹம்ஸினீ மாதா மலயாசல-வாஸினீ || 95 ||
ஸுமுகீ நலினீ ஸுப்ரூ: சோபனா ஸுரநாயிகா |காலகண்டீ காந்திமதீ க்ஷோபிணீ ஸூக்ஷ்மரூபிணீ || 96 ||
வஜ்ரேச்வரீ வாமதேவீ வயோவஸ்தா-விவர்ஜிதா |ஸித்தேச்வரீ ஸித்தவித்யா ஸித்தமாதா யசஸ்வினீ || 97 ||
விசுத்திசக்ர-நிலயா(ஆ)ரக்தவர்ணா த்ரிலோசனா |கட்வாங்காதி-ப்ரஹரணா வதனைக-ஸமன்விதா || 98 ||
பாயஸான்னப்ரியா த்வக்ஸ்தா பசுலோக-பயங்கரீ |அம்ருதாதி-மஹாசக்தி-ஸம்வ்ருதா டாகினீச்வரீ || 99 ||
அனாஹதாப்ஜ-நிலயா ச்யாமாபா வதனத்வயா |தம்ஷ்ட்ரோஜ்ஜ்வலாக்ஷ-மாலாதி-தரா ருதிரஸம்ஸ்திதா || 100 ||
காலராத்ர்யாதி-சக்த்யௌக-வ்ருதா ஸ்னிக்தௌதனப்ரியா |மஹாவீரேந்த்ர-வரதா ராகிண்யம்பா-ஸ்வரூபிணீ || 101 ||
மணிபூராப்ஜ-நிலயா வதனத்ரய-ஸம்யுதா |வஜ்ராதிகாயுதோபேதா டாமர்யாதிபிராவ்ருதா || 102 ||
ரக்தவர்ணா மாம்ஸநிஷ்டா குடான்ன-ப்ரீத-மானஸா |ஸமஸ்தபக்த-ஸுகதா லாகின்யம்பா-ஸ்வரூபிணீ || 103 ||
ஸ்வாதிஷ்டானாம்புஜ-கதா சதுர்வக்த்ர-மனோஹரா |சூலாத்யாயுத-ஸம்பன்னா பீதவர்ணாதிகர்விதா || 104 ||
மேதோநிஷ்டா மதுப்ரீதா பந்தின்யாதி-ஸமன்விதா |தத்யன்னாஸக்த-ஹ்ருதயா காகினீ-ரூப-தாரிணீ || 105 ||
மூலாதாராம்புஜாரூடா பஞ்ச-வக்த்ராஸ்தி-ஸம்ஸ்திதா |அங்குசாதி-ப்ரஹரணா வரதாதி-நிஷேவிதா || 106 ||
முத்கௌதனாஸக்த-சித்தா ஸாகின்யம்பா-ஸ்வரூபிணீ |ஆக்ஞா-சக்ராப்ஜ-நிலயா சுக்லவர்ணா ஷடானனா || 107 ||
மஜ்ஜாஸம்ஸ்தா ஹம்ஸவதீ-முக்ய-சக்தி-ஸமன்விதா |ஹரித்ரான்னைக-ரஸிகா ஹாகினீ-ரூப-தாரிணீ || 108 ||
ஸஹஸ்ரதல-பத்மஸ்தா ஸர்வ-வர்ணோப-சோபிதா |ஸர்வாயுததரா சுக்ல-ஸம்ஸ்திதா ஸர்வதோமுகீ || 109 ||
ஸர்வௌதன-ப்ரீதசித்தா யாகின்யம்பா-ஸ்வரூபிணீ |ஸ்வாஹா ஸ்வதாமதிர்மேதா ச்ருதி: ஸ்ம்ருதிரனுத்தமா || 110 ||
புண்யகீர்தி: புண்யலப்யா புண்யச்ரவண-கீர்தனா |புலோமஜார்சிதா பந்த-மோசனீ பந்துராலகா || 111 ||
விமர்சரூபிணீ வித்யா வியதாதி-ஜகத்ப்ரஸூ: |ஸர்வவ்யாதி-ப்ரசமனீ ஸர்வம்ருத்யு-நிவாரிணீ || 112 ||
அக்ரகண்யாசிந்த்யரூபா கலிகல்மஷ-நாசினீ |காத்யாயனீ காலஹந்த்ரீ கமலாக்ஷ-நிஷேவிதா || 113 ||
தாம்பூல-பூரித-முகீ தாடிமீ-குஸும-ப்ரபா |ம்ருகாக்ஷீ மோஹினீ முக்யா ம்ருடானீ மித்ரரூபிணீ || 114 ||
நித்யத்ருப்தா பக்தநிதிர்நியந்த்ரீ நிகிலேச்வரீ |மைத்ர்யாதி-வாஸனாலப்யா மஹாப்ரலய-ஸாக்ஷிணீ || 115 ||
பரா சக்தி: பரா நிஷ்டா ப்ரக்ஞானகன-ரூபிணீ |மாத்வீபானாலஸா மத்தா மாத்ருகா-வர்ண-ரூபிணீ || 116 ||
மஹாகைலாஸ-நிலயா ம்ருணால-ம்ருது-தோர்லதா |மஹனீயா தயாமூர்திர்மஹாஸாம்ராஜ்ய-சாலினீ || 117 ||
ஆத்மவித்யா மஹாவித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா |ஸ்ரீ-ஷோடசாக்ஷரீ-வித்யா த்ரிகூடா காமகோடிகா || 118 ||
கடாக்ஷ-கிங்கரீ-பூத-கமலா-கோடி-ஸேவிதா |சிர:ஸ்திதா சந்த்ரனிபா பாலஸ்தேந்த்ர-தனு:ப்ரபா || 119 ||
ஹ்ருதயஸ்தா ரவிப்ரக்யா த்ரிகோணாந்தர-தீபிகா |தாக்ஷாயணீ தைத்யஹந்த்ரீ தக்ஷயக்ஞ-விநாசினீ || 120 ||
தராந்தோலித-தீர்காக்ஷீ தர-ஹாஸோஜ்ஜ்வலன்-முகீ |குருமூர்திர்குணநிதிர்கோமாதா குஹஜன்மபூ: || 121 ||
தேவேசீ தண்டநீதிஸ்தா தஹராகாச-ரூபிணீ |ப்ரதிபன்முக்ய-ராகாந்த-திதி-மண்டல-பூஜிதா || 122 ||
கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப-வினோதினீ |ஸசாமர-ரமா-வாணீ-ஸவ்ய-தக்ஷிண-ஸேவிதா || 123 ||
ஆதிசக்திரமேயா(ஆ)த்மா பரமா பாவனாக்ருதி: |அனேககோடி-ப்ரஹ்மாண்ட-ஜனனீ திவ்யவிக்ரஹா || 124 ||
க்லீங்காரீ கேவலா குஹ்யா கைவல்ய-பததாயினீ |த்ரிபுரா த்ரிஜகத்வந்த்யா த்ரிமூர்திஸ்த்ரிதசேச்வரீ || 125 ||
த்ர்யக்ஷரீ திவ்ய-கந்தாட்யா ஸிந்தூர-திலகாஞ்சிதா |உமா சைலேந்த்ரதனயா கௌரீ கந்தர்வ-ஸேவிதா || 126 ||
விச்வகர்பா ஸ்வர்ணகர்பாவரதா வாகதீச்வரீ |த்யானகம்யாபரிச்சேத்யா ஞானதா ஞானவிக்ரஹா || 127 ||
ஸர்வவேதாந்த-ஸம்வேத்யா ஸத்யானந்த-ஸ்வரூபிணீ |லோபாமுத்ரார்சிதா லீலா-க்லுப்த-ப்ரஹ்மாண்ட-மண்டலா || 128 ||
அத்ருச்யா த்ருச்யரஹிதா விக்ஞாத்ரீ வேத்யவர்ஜிதா |யோகினீ யோகதா யோக்யா யோகானந்தா யுகந்தரா || 129 ||
இச்சாசக்தி-ஞானசக்தி-க்ரியாசக்தி-ஸ்வரூபிணீ |ஸர்வாதாரா ஸுப்ரதிஷ்டா ஸதஸத்ரூப-தாரிணீ || 130 ||
அஷ்டமூர்திரஜாஜைத்ரீ லோகயாத்ரா-விதாயினீ |ஏகாகினீ பூமரூபா நிர்த்வைதா த்வைதவர்ஜிதா || 131 ||
அன்னதா வஸுதா வ்ருத்தா ப்ரஹ்மாத்மைக்ய-ஸ்வரூபிணீ |ப்ருஹதீ ப்ராஹ்மணீ ப்ராஹ்மீ ப்ரஹ்மானந்தா பலிப்ரியா || 132 ||
பாஷாரூபா ப்ருஹத்ஸேனா பாவாபாவ-விவர்ஜிதா |ஸுகாராத்யா சுபகரீ சோபனா ஸுலபா கதி: || 133 ||
ராஜ-ராஜேச்வரீ ராஜ்ய-தாயினீ ராஜ்ய-வல்லபா |ராஜத்க்ருபா ராஜபீட-நிவேசித-நிஜாச்ரிதா || 134 ||
ராஜ்யலக்ஷ்மீ: கோசநாதா சதுரங்க-பலேச்வரீ |ஸாம்ராஜ்ய-தாயினீ ஸத்யஸந்தா ஸாகரமேகலா || 135 ||
தீக்ஷிதா தைத்யசமனீ ஸர்வலோக-வசங்கரீ |ஸர்வார்ததாத்ரீ ஸாவித்ரீ ஸச்சிதானந்த-ரூபிணீ || 136 ||
தேச-காலாபரிச்சின்னா ஸர்வகா ஸர்வமோஹினீ |ஸரஸ்வதீ சாஸ்த்ரமயீ குஹாம்பா குஹ்யரூபிணீ || 137 ||
ஸர்வோபாதி-விநிர்முக்தா ஸதாசிவ-பதிவ்ரதா |ஸம்ப்ரதாயேச்வரீ ஸாத்வீ குருமண்டல-ரூபிணீ || 138 ||
குலோத்தீர்ணா பகாராத்யா மாயா மதுமதீ மஹீ |கணாம்பா குஹ்யகாராத்யா கோமலாங்கீ குருப்ரியா || 139 ||
ஸ்வதந்த்ரா ஸர்வதந்த்ரேசீ தக்ஷிணாமூர்தி-ரூபிணீ |ஸனகாதி-ஸமாராத்யா சிவக்ஞான-ப்ரதாயினீ || 140 ||
சித்கலா(ஆ)நந்த-கலிகா ப்ரேமரூபா ப்ரியங்கரீ |நாமபாராயண-ப்ரீதா நந்திவித்யா நடேச்வரீ || 141 ||
மித்யா-ஜகததிஷ்டானா முக்திதா முக்திரூபிணீ |லாஸ்யப்ரியா லயகரீ லஜ்ஜா ரம்பாதிவந்திதா || 142 ||
பவதாவ-ஸுதாவ்ருஷ்டி: பாபாரண்ய-தவானலா |தௌர்பாக்ய-தூலவாதூலா ஜராத்வாந்த-ரவிப்ரபா || 143 ||
பாக்யாப்தி-சந்த்ரிகா பக்த-சித்தகேகி-கனாகனா |ரோகபர்வத-தம்போலிர்ம்ருத்யுதாரு-குடாரிகா || 144 ||
மஹேச்வரீ மஹாகாலீ மஹாக்ராஸா மஹாசனா |அபர்ணா சண்டிகா சண்டமுண்டாஸுர-நிஷூதினீ || 145 ||
க்ஷராக்ஷராத்மிகா ஸர்வ-லோகேசீ விச்வதாரிணீ |த்ரிவர்கதாத்ரீ ஸுபகா த்ர்யம்பகா த்ரிகுணாத்மிகா || 146 ||
ஸ்வர்காபவர்கதா சுத்தா ஜபாபுஷ்ப-நிபாக்ருதி: |ஓஜோவதீ த்யுதிதரா யக்ஞரூபா ப்ரியவ்ரதா || 147 ||
துராராத்யா துராதர்ஷா பாடலீ-குஸும-ப்ரியா |மஹதீ மேருநிலயா மந்தார-குஸும-ப்ரியா || 148 ||
வீராராத்யா விராட்ரூபா விரஜா விச்வதோமுகீ |ப்ரத்யக்ரூபா பராகாசா ப்ராணதா ப்ராணரூபிணீ || 149 ||
மார்தாண்ட-பைரவாராத்யா மந்த்ரிணீன்யஸ்த-ராஜ்யதூ: |த்ரிபுரேசீ ஜயத்ஸேனா நிஸ்த்ரைகுண்யா பராபரா || 150 ||
ஸத்ய-ஞானானந்த-ரூபா ஸாமரஸ்ய-பராயணா |கபர்தினீ கலாமாலா காமதுக் காமரூபிணீ || 151 ||
கலாநிதி: காவ்யகலா ரஸக்ஞா ரஸசேவதி: |புஷ்டா புராதனா பூஜ்யா புஷ்கரா புஷ்கரேக்ஷணா || 152 ||
பரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா |பாசஹஸ்தா பாசஹந்த்ரீ பரமந்த்ர-விபேதினீ || 153 ||
மூர்தாமூர்தாநித்யத்ருப்தா முனிமானஸ-ஹம்ஸிகா |ஸத்யவ்ரதா ஸத்யரூபா ஸர்வாந்தர்யாமினீ ஸதீ || 154 ||
ப்ரஹ்மாணீ ப்ரஹ்மஜனனீ பஹுரூபா புதார்சிதா |ப்ரஸவித்ரீ ப்ரசண்டா(ஆ)ஞா ப்ரதிஷ்டா ப்ரகடாக்ருதி: || 155 ||
ப்ராணேச்வரீ ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீட-ரூபிணீ |விச்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ: || 156 ||
முகுந்தா முக்திநிலயா மூலவிக்ரஹ-ரூபிணீ |பாவக்ஞா பவரோகக்னீ பவசக்ர-ப்ரவர்தினீ || 157 ||
சந்த:ஸாரா சாஸ்த்ரஸாரா மந்த்ரஸாரா தலோதரீ |உதாரகீர்திருத்தாமவைபவா வர்ணரூபிணீ || 158 ||
ஜன்மம்ருத்யு-ஜராதப்த-ஜனவிச்ராந்தி-தாயினீ |ஸர்வோபநிஷ-துத்-குஷ்டா சாந்த்யதீத-கலாத்மிகா || 159 ||
கம்பீரா ககனாந்தஸ்தா கர்விதா கானலோலுபா |கல்பனா-ரஹிதா காஷ்டாகாந்தா காந்தார்த-விக்ரஹா || 160 ||
கார்யகாரண-நிர்முக்தா காமகேலி-தரங்கிதா |கனத்கனகதா-டங்கா லீலா-விக்ரஹ-தாரிணீ || 161 ||
அஜா க்ஷயவிநிர்முக்தா முக்தா க்ஷிப்ர-ப்ரஸாதினீ |அந்தர்முக-ஸமாராத்யா பஹிர்முக-ஸுதுர்லபா || 162 ||
த்ரயீ த்ரிவர்கநிலயா த்ரிஸ்தா த்ரிபுரமாலினீ |நிராமயா நிராலம்பா ஸ்வாத்மாராமா ஸுதாஸ்ருதி: || 163 ||
ஸம்ஸாரபங்க-நிர்மக்ன-ஸமுத்தரண-பண்டிதா |யக்ஞப்ரியா யக்ஞகர்த்ரீ யஜமான-ஸ்வரூபிணீ || 164 ||
தர்மாதாரா தனாத்யக்ஷா தனதான்ய-விவர்தினீ |விப்ரப்ரியா விப்ரரூபா விச்வப்ரமண-காரிணீ || 165 ||
விச்வக்ராஸா வித்ருமாபா வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ |அயோநிர்யோனிநிலயா கூடஸ்தா குலரூபிணீ || 166 ||
வீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாதரூபிணீ |விக்ஞானகலனா கல்யா விதக்தா பைந்தவாஸனா || 167 ||
தத்த்வாதிகா தத்த்வமயீ தத்த்வமர்த-ஸ்வரூபிணீ |ஸாமகானப்ரியா ஸௌம்யா ஸதாசிவ-குடும்பினீ || 168 ||
ஸவ்யாபஸவ்ய-மார்கஸ்தா ஸர்வாபத்விநிவாரிணீ |ஸ்வஸ்தா ஸ்வபாவமதுரா தீரா தீரஸமர்சிதா || 169 ||
சைதன்யார்க்ய-ஸமாராத்யா சைதன்ய-குஸுமப்ரியா |ஸதோதிதா ஸதாதுஷ்டா தருணாதித்ய-பாடலா || 170 ||
தக்ஷிணா-தக்ஷிணாராத்யா தரஸ்மேர-முகாம்புஜா |கௌலினீ-கேவலானர்க்ய-கைவல்ய-பததாயினீ || 171 ||
ஸ்தோத்ரப்ரியா ஸ்துதிமதீ ச்ருதி-ஸம்ஸ்துத-வைபவா |மனஸ்வினீ மானவதீ மஹேசீ மங்கலாக்ருதி: || 172 ||
விச்வமாதா ஜகத்தாத்ரீ விசாலாக்ஷீ விராகிணீ |ப்ரகல்பா பரமோதாரா பராமோதா மனோமயீ || 173 ||
வ்யோமகேசீ விமானஸ்தா வஜ்ரிணீ வாமகேச்வரீ |பஞ்சயக்ஞ-ப்ரியா பஞ்ச-ப்ரேத-மஞ்சாதிசாயினீ || 174 ||
பஞ்சமீ பஞ்சபூதேசீ பஞ்ச-ஸங்க்யோபசாரிணீ |சாச்வதீ சாச்வதைச்வர்யா சர்மதா சம்புமோஹினீ || 175 ||
தராதரஸுதா தன்யா தர்மிணீ தர்மவர்தினீ |லோகாதீதா குணாதீதா ஸர்வாதீதா சமாத்மிகா || 176 ||
பந்தூக-குஸுமப்ரக்யா பாலா லீலாவினோதினீ |ஸுமங்கலீ ஸுககரீ ஸுவேஷாட்யா ஸுவாஸினீ || 177 ||
ஸுவாஸின்யர்சன-ப்ரீதா(ஆ)சோபனா சுத்தமானஸா |பிந்து-தர்பண-ஸந்துஷ்டா பூர்வஜா த்ரிபுராம்பிகா || 178 ||
தசமுத்ரா-ஸமாராத்யா த்ரிபுராஸ்ரீ-வசங்கரீ |ஞானமுத்ரா ஞானகம்யா ஞானக்ஞேய-ஸ்வரூபிணீ || 179 ||
யோனிமுத்ரா த்ரிகண்டேசீ த்ரிகுணாம்பா த்ரிகோணகா |அனகாத்புத-சாரித்ரா வாஞ்சிதார்த-ப்ரதாயினீ || 180 ||
அப்யாஸாதிசய-ஞாதா ஷடத்வாதீத-ரூபிணீ |அவ்யாஜ-கருணா-மூர்திரக்ஞான-த்வாந்த-தீபிகா || 181 ||
ஆபால-கோப-விதிதா ஸர்வானுல்லங்க்ய-சாஸனா |ஸ்ரீசக்ரராஜ-நிலயா ஸ்ரீமத்-த்ரிபுரஸுந்தரீ || 182 ||
ஸ்ரீசிவா சிவ-சக்த்யைக்ய-ரூபிணீ லலிதாம்பிகா |ஏவம் ஸ்ரீலலிதா தேவ்யா நாம்னாம் ஸாஹஸ்ரகம் ஜகு: ||
பொருள் / விளக்கம்
பிரம்மாண்ட புராணத்தில், ஹயக்ரீவர் அகஸ்திய முனிவருக்கு உபதேசித்தது இந்த ஸஹஸ்ரநாமம். அன்னையின் கட்டளைப்படி வசினி முதலான வாக்தேவதைகள் இந்த ஆயிரம் நாமங்களைப் பாடினர் என்று நூல் கூறுகிறது. 182½ ஸ்லோகங்களில் ஆயிரம் நாமங்களும் ஒன்றுகூட மீண்டும் வராமல் அமைந்திருப்பது இதன் தனிச் சிறப்பு.
அமைப்பு: முதலில் ந்யாஸம், பின் நான்கு தியான ஸ்லோகங்கள், அதன் பின் ஸஹஸ்ரநாமம். நாமங்கள் முதலில் அன்னையின் தோற்றம் (1–51), பண்டாசுர வதம் (64–84), குண்டலினி யோகம், பின் அவளது எல்லையற்ற தன்மைகள் என்று வரிசையாக அமைந்துள்ளன.
பாராயணம்: வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, நவராத்திரி நாட்களில் சிறப்பு. தியான ஸ்லோகங்களுடன் தொடங்கி, மனம் ஒன்றிப் பாராயணம் செய்வது மரபு.
இதன் பாடத்தில் சில இடங்களில் பதிப்புகளுக்கு இடையே சிறு வேறுபாடுகள் உண்டு.