ஸ்தோத்திரம்

ஸுப்ரமண்ய புஜங்கம்

Subramanya Bhujangam — Lyrics in Tamil

அருளியவர்: ஆதி சங்கரர்

திருச்செந்தூர் முருகன் மீது ஆதி சங்கரர் பாடிய 33 ஸ்லோகங்கள். பாம்பின் நெளிவு போன்ற "புஜங்கப்ரயாதம்" என்ற சந்தத்தில் அமைந்தது; நோய் நீங்கவும் மரண பயம் நீங்கவும் பாராயணம் செய்யப்படுகிறது.

ஸதா பாலரூபாபி விக்நாத்ரிஹந்த்ரீமஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா |விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதா மேவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்தி: || 1 ||

ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்தம்ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம் |சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மேமுகாந்நி:ஸரந்தே கிரச்சாபி சித்ரம் || 2 ||

மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்மனோஹாரிதேஹம் மஹச்சித்தகேஹம் |மஹீதேவதேவம் மஹாவேதபாவம்மஹாதேவபாலம் பஜே லோகபாலம் || 3 ||

யதா ஸந்நிதானம் கதா மானவா மேபவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ |இதி வ்யஞ்ஜயன்ஸிந்துதீரே ய ஆஸ்தேதமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம் || 4 ||

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா-ஸ்ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே |இதீவோர்மிபங்க்தீர்ந்ருணாம் தர்சயந்தம்ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் || 5 ||

கிரௌ மந்நிவாஸே நரா யேதிரூடா-ஸ்ததா பர்வதே ராஜதே தேதிரூடா: |இதீவ ப்ருவன் கந்தசைலாதிரூட:ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோஸ்து || 6 ||

மஹாம்போதிதீரே மஹாபாபசோரேமுனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே |குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம் தம் || 7 ||

லஸத்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹேஸுமஸ்தோமஸஞ்சன்னமாணிக்யமஞ்சே |ஸமுத்யத்ஸஹஸ்ரார்கதுல்யப்ரகாசம்ஸதா பாவயே கார்திகேயம் ஸுரேசம் || 8 ||

ரணத்தம்ஸகே மஞ்ஜுலேத்யந்தசோணேமனோஹாரிலாவண்யபீயூஷபூர்ணே |மன:ஷட்பதோ மே பவத்க்லேசதப்த:ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே || 9 ||

ஸுவர்ணாபதிவ்யாம்பரைர்பாஸமானாம்க்வணத்கிங்கிணீமேகலாசோபமானாம் |லஸத்தேமபட்டேன வித்யோதமானாம்கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமானாம் || 10 ||

புலிந்தேசகன்யாகநாபோகதுங்க-ஸ்தனாலிங்கனாஸக்தகாச்மீரராகம் |நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் || 11 ||

விதௌ க்ல்ருப்ததண்டான்ஸ்வலீலாத்ருதாண்டா-ந்நிரஸ்தேபசுண்டாந்த்விஷத்காலதண்டான் |ஹதேந்த்ராரிஷண்டாஞ்ஜகத்த்ராணசௌண்டான்ஸதா தே ப்ரசண்டாஞ்ச்ரயே பாஹுதண்டான் || 12 ||

ஸதா சாரதா: ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத்ஸமந்தாத் |ஸதா பூர்ணபிம்பா: கலங்கைச்ச ஹீனா-ஸ்ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் || 13 ||

ஸ்புரன்மந்தஹாஸை: ஸஹம்ஸானி சஞ்ச-த்கடாக்ஷாவலீப்ருங்கஸங்கோஜ்ஜ்வலானி |ஸுதாஸ்யந்திபிம்பாதராணீசஸூனோதவாலோகயே ஷண்முகாம்போருஹாணி || 14 ||

விசாலேஷு கர்ணாந்ததீர்கேஷ்வஜஸ்ரம்தயாஸ்யந்திஷு த்வாதசஸ்வீக்ஷணேஷு |மயீஷத்கடாக்ஷ: ஸக்ருத்பாதிதச்சே-த்பவேதே தயாசீல கா நாம ஹானி: || 15 ||

ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தாஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான் |ஜகத்பாரப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:கிரீடோஜ்ஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய: || 16 ||

ஸ்புரத்ரத்னகேயூரஹாராபிராம-ச்சலத்குண்டலஸ்ரீலஸத்கண்டபாக: |கடௌ பீதவாஸா: கரே சாரு சக்தி:புரஸ்தான்மமாஸ்தாம் புராரேஸ்தனூஜ: || 17 ||

இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தான்ப்ரஸார்யா-ஹ்வயத்யாதராச்சங்கரே மாதுரங்காத் |ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்ஹராச்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்திம் || 18 ||

குமாரேசஸூனோ குஹ ஸ்கந்த ஸேனா-பதே சக்திபாணே மயூராதிரூட |புலிந்தாத்மஜாகாந்த பக்தார்திஹாரின்ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் த்வம் || 19 ||

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸஞ்க்ஞே விசேஷ்டேகபோத்காரிவக்த்ரே பயோத்கம்பிகாத்ரே |ப்ரயாணோன்முகே மய்யநாதே ததானீம்த்ருதம் மே தயாலோ பவாக்ரே குஹ த்வம் || 20 ||

க்ருதாந்தஸ்ய தூதேஷு சண்டேஷு கோபா-த்தஹ ச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸு |மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்புர: சக்திபாணிர்மமாயாஹி சீக்ரம் || 21 ||

ப்ரணம்யாஸக்ருத்பாதயோஸ்தே பதித்வாப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்தயேனேகவாரம் |ந வக்தும் க்ஷமோஹம் ததானீம் க்ருபாப்தேந கார்யாந்தகாலே மநாகப்யுபேக்ஷா || 22 ||

ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா சூரநாமாஹதஸ்தாரக: ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய: |மமாந்தர்ஹ்ருதிஸ்தம் மன:க்லேசமேகம்ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி || 23 ||

அஹம் ஸர்வதா து:கபாராவஸன்னோபவான் தீனபந்துஸ்த்வதன்யம் ந யாசே |பவத்பக்திரோதம் ஸதா க்ல்ருப்தபாதம்மமாதிம் த்ருதம் நாசயோமாஸுத த்வம் || 24 ||

அபஸ்மாரகுஷ்டக்ஷயார்ச:ப்ரமேஹ-ஜ்வரோன்மாதகுல்மாதிரோகா மஹாந்த: |பிசாசாச்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே || 25 ||

த்ருசி ஸ்கந்தமூர்தி: ச்ருதௌ ஸ்கந்தகீர்தி-ர்முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம் |கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்குஹே ஸந்து லீனா மமாசேஷபாவா: || 26 ||

முனீநாமுதாஹோ ந்ருணாம் பக்திபாஜா-மபீஷ்டப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா: |ந்ருணாமந்த்யஜாநாமபி ஸ்வார்ததானேகுஹாத்தேவமன்யம் ந ஜானே ந ஜானே || 27 ||

கலத்ரம் ஸுதா பந்துவர்க: பசுர்வாநரோ வாத நாரீ க்ருஹே யே மதீயா: |யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்ஸ்மரந்தச்ச தே ஸந்து ஸர்வே குமார || 28 ||

ம்ருகா: பக்ஷிணோ தம்சகா யே ச துஷ்டா-ஸ்ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே |பவச்சக்திதீக்ஷ்ணாக்ரபின்னா: ஸுதூரேவினச்யந்து தே சூர்ணிதக்ரௌஞ்சசைலே || 29 ||

ஜனித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்ஸஹேதே ச கிம் தேவஸேனாதிநாத |அஹம் சாதிபாலோ பவான் லோகதாத:க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச || 30 ||

நம: கேகினே சக்தயே சாபி துப்யம்நமச்சாக துப்யம் நம: குக்குடாய |நம: ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம்புன: ஸ்கந்தமூர்தே நமஸ்தே நமோஸ்து || 31 ||

ஜயானந்தபூமஞ்ஜயாபாரதாம-ஞ்ஜயாமோககீர்தே ஜயானந்தமூர்தே |ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோஜய த்வம் பிதா முக்திதானேசஸூனோ || 32 ||

புஜங்காக்யவ்ருத்தேன க்ல்ருப்தம் ஸ்தவம் ய:படேத்பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய |ஸ புத்ரான்கலத்ரம் தனம் தீர்கமாயு-ர்லபேத்ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நர: ஸ: || 33 ||

பொருள் / விளக்கம்

திருச்செந்தூருக்கு வந்த ஆதி சங்கரர், கடற்கரையில் கோயில் கொண்ட முருகனைத் தரிசித்து இந்த ஸ்தோத்திரத்தைப் பாடியதாகவும், அவருக்கு ஏற்பட்டிருந்த கொடிய நோய் நீங்கியதாகவும் மரபு கூறுகிறது.

சிறப்புகள்:

  • "சொல்லும் அறியேன், பொருளும் அறியேன், செய்யுளும் உரைநடையும் அறியேன்; ஆறுமுகச் சுடர் என் இதயத்தில் ஒளிர்வதால் சொற்கள் தானாக வருகின்றன" (2) என்று பணிவுடன் தொடங்குகிறார்.
  • கடல் அலைகள் கரையில் அடங்குவது போல, என் சந்நிதிக்கு வருபவர்களின் துன்பங்கள் அடங்கும் என்று செந்தூர்க் கடலே சொல்வதாகப் பாடுகிறார் (5).
  • இறுதிக் காலத்தில் எமதூதர்கள் அச்சுறுத்தும்போது மயில் மீதேறி வந்து "அஞ்சேல்" என்று காக்க வேண்டுகிறார் (20–22).
  • வலிப்பு, தொழுநோய், காசம், காய்ச்சல் போன்ற நோய்களும் பேய்களும் முருகனின் பன்னீர் இலை விபூதியைக் கண்டதும் ஓடிவிடும் என்கிறார் (25).

பாராயணம்: சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்க்கிழமைகளிலும், நோய் நீங்க வேண்டியும் பாராயணம் செய்யப்படுகிறது.