சண்முக கவசம்
Shanmuga Kavasam — Lyrics in Tamil
"அண்டமாய் அவனியாகி" என்று தொடங்கும் பாம்பன் சுவாமிகளின் முப்பது பாடல்கள் கொண்ட கவசம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் முருகன் காக்க வேண்டுகிறது.
அண்டமாய் அவனி யாகிஅறியொணாப் பொருள தாகித்தொண்டர்கள் குருவு மாகித்துகளறு தெய்வ மாகிஎண்டிசை போற்ற நின்றஎன்னருள் ஈச னானதிண்டிறல் சரவ ணத்தான்தினமும்என் சிரசைக் காக்க.
ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்கதாதவிழ் கடப்பந் தாரான்தான்இரு நுதலைக் காக்க!சோதியாம் தணிகை யீசன்துரிசிலா விழியைக் காக்க!நாதனாம் கார்த்தி கேயன்நாசியை நயந்து காக்க!
இருசெவி களையும் செவ்வேள்இயல்புடன் காக்க! வாயைமுருகவேல் காக்க! நாப்பல்முழுதுநல் குமரன் காக்க!துரிசறு கதுப்பை யானைத்துண்டனார் துணைவன் காக்க!திருவுடன் பிடரி தன்னைச்சிவசுப்ர மணியன் காக்க!
ஈசனாம் வாகு லேயன்எனதுகந் தரத்தைக் காக்க!தேசுறு தோள்வி லாவும்திருமகள் மருகன் காக்க!ஆசிலா மார்பை ஈராறுஆயுதன் காக்க; என்றன்ஏசிலா முழங்கை தன்னைஎழில்குறிஞ் சிக்கோன் காக்க!
உறுதியாய் முன்கை தன்னைஉமையிள மதலை காக்க;தறுகண் ஏறிடவே என்கைத்தலத்தைமா முருகன் காக்க;புறங்கையை அயிலோன்காக்க;பொறிக்கர விரல்கள் பத்தும்பிறங்குமால் மருகன் காக்க;பின்முது கைச்சேய் காக்க.
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞைஊர்தியோன் காக்க; வம்புத்தோள்நிமிர் கரேசன் உந்திச்சுழியினைக் காக்க; குய்யநாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க; பீஜஆணியைக் கந்தன் காக்க;அறுமுகன் குதத்தைக் காக்க.
எஞ்சிடாது இடுப்பை வேலுக்குஇறைவனார் காக்க காக்க;அஞ்சகனம் ஓரி ரண்டும்அரன்மகன் காக்க காக்க;விஞ்சிடு பொருட்காங் கேயன்விளரடித் தொடையைக் காக்க;செஞ்சரண் நேச ஆசான்திமிருமுன் தொடையைக் காக்க.
ஏரகத் தேவன் என்தாள்இருமுழங் காலும் காக்க;சீருடைக் கணைக்கால் தன்னைச்சீரலை வாய்த்தே காக்க;நேருடைப் பரடுஇ ரண்டும்நிகழ்பரங் கிரியன் காக்க;சீரிய குதிக்கால் தன்னைத்திருச்சோலை மலையன் காக்க.
ஐயுறு மலையன் பாதத்தமர்பத்து விரலும் காக்க;பையுறு பழநி நாதபரன்அகம் காலைக் காக்க;மெய்யுடல் முழுதும் ஆதிவிமலசண் முகவன் காக்க;தெய்வ நாயக விசாகன்தினமும்என் நெஞ்சைக் காக்க.
ஒலியெழ உரத்த சத்தத்தொடுவரு பூத ப்ரேதம்பலிகொள் இராக்க தப்பேய்பலகணத்து எவையா னாலும்கிளிகொள எனைவேல் காக்க;கெடுபரர் செய்யும் சூன்யம்வலியுள மந்த்ர தந்த்ரம்வருந்திடாது அயில்வேல் காக்க!
ஓங்கிய சீற்ற மேகொண்டுஉவணிவில் வேல்சூ லங்கள்தாங்கிய தண்டம் எஃகம்தடிபரசு ஈட்டி ஆதிபாங்குடை ஆயுதங்கள் பகைவர்என் மேலே ஒச்சின்தீங்குசெய் யாமல் என்னைத்திருக்கைவேல் காக்க காக்க!
ஒளவியம் உளர், ஊன் உண்போர்அசடர், பேய், அரக்கர், புல்லர்,தெவ்வர்கள் எவரா னாலும்திடமுடன் எனைமல் கட்டத்தவ்வியே வருவார் ஆயின்சராசரம் எலாம்பு ரக்கும்கவ்வுடைச் சூர சண்டன்கைஅயில் காக்க காக்க!
கடுவிடப் பாந்தள் சிங்கம்கரடிநாய் புலிமா யானைகொடிய கோள்நாய் குரங்குகோலமார்ச் சாலம் சம்புநடையுடை எதனா லேனும்நான்இடர்ப் பட்டி டாமல்சடுதியில் வடிவேல் காக்க;சானவி முளைவேல் காக்க!
ஙகர மேபோல் தமீஇஞானவேல் காக்க! வன்புள்சிகரிதேள் நண்டுக் காலிசெய்யன்ஏறு ஆலப் பல்லிநகமுடை ஒந்தி பூரான்நளிவண்டு புலியின் பூச்சிஉகமிசை இவற்றால் எற்குஓர்ஊறிலாது ஐவேல் காக்க.
சலத்தில்உய் வன்மீன் ஏறுதண்டுடைத் திருக்கை மற்றும்நிலத்திலும் சலத்தி லும்தான்நெடுந்துயர் தரற்கே யுள்ளகுலத்தினால் நான்வ ருத்தம்கொண்டிடாது அவ்வவ் வேளைபலத்துடன் இருந்து காக்க;பாவகி கூர்வேல் காக்க.
ஞமலியம் பரியன் கைவேல்நவக்கிர கக்கோள் காக்க;சுமவிழி நோய்கள் தந்தசூலை ஆக்கிராண ரோகம்திமிர்கழல் வாதம் சோகைசிரம்அடி கர்ண ரோகம்எமையணு காம லேபன்னிருபுயன் சயவேல் காக்க.
டமருகத்து அடிபோல் நைக்கும்தலையிடி கண்ட மாலைகுமுறுவிப் புருதி குன்மம்குடல்வலி ஈழை காசம்நிமிரொணாது இருத்தும் வெட்டைநீர்ப்பிர மேகம் எல்லாம்எமையடை யாம லேகுன்நெறிந்தவன் கைவேல் காக்க.
இணக்கம் இல்லாத பித்தஎரிவுமா சுரங்கள் கைகால்முணக்கவே குறைக்கும் குட்டம்மூலவெண் முளைதீ மந்தம்சணத்திலே கொல்லும் சன்னிசாமென் றறையும் இந்தப்பிணிக்குலம் எனைஆ ளாமல்பெருஞ்சத்தி வடிவேல் காக்க.
தவனமா ரோகம் வாதம்சயித்தியம் அரோச கம்மெய்சுவறவே செய்யும் மூலச்சூடுஇளைப்பு உடற்று விக்கல்அவதிசெய் பேதி சீழ்நோய்அண்டவா தங்கள் சூலைஎனையும்என் இடத்தெய் தாமல்எம்பிரான் திணிவேல் காக்க.
நமைப்புறு கிரிந்தி வீக்கம்நணுகிடு பாண்டு சோபம்அமர்த்திடு கருமை வெண்மைஆகுபல் தொழுநோய் கக்கல்இமைக்குமுன் உறுவ லிப்போடுஎழுபுடைப் பகந்த ராதிஇமைப்பொழு தேனும் என்னைஎய்தாமல் அருள்வேல் காக்க.
பல்லது கடித்து மீசைபடப டென்றே துடிக்கக்கல்லினும் வலிய நெஞ்சம்காட்டியே உருட்டி நோக்கிஎல்லினும் கரிய மேனிஎமபடர் வரினும் என்னைஒல்லையில் தார காரிஓம்ஐம் ரீம்வேல் காக்க!
மண்ணிலும் மரத்தின் மீதும்மலையிலும் நெருப்பின் மீதும்தண்நிறை சலத்தின் மீதும்சாரிசெய் ஊர்தி மீதும்விண்ணிலும் பிலத்தின் உள்ளும்வேறெந்த இடத்தும் என்னைநண்ணிவந்து அருளார் சஷ்டிநாதன்வேல் காக்க காக்க.
யகரமே போல்சூ லேந்தும்நறும்புயன் வேல்முன் காக்க,அகரமே முதலாம் ஈராறுஅம்பகன் வேல்பின் காக்க,சகரமோடு ஆறும் ஆனோன்தன்கைவேல் நடுவில் காக்க,சிகரமின் தேவ மோலிதிகழ்ஐவேல் கீழ்மேல் காக்க.
ரஞ்சித மொழிதே வானைநாயகன் வள்ளி பங்கன்செஞ்சய வேல்கி ழக்கில்திறமுடன் காக்க, அங்கிவிஞ்சிடு திசையின் ஞானவீரன்வேல் காக்க; தெற்கில்எஞ்சிடாக் கதிர்கா மத்தோன்இகலுடைக் கரவேல் காக்க.
லகரமே போல்கா ளிங்கன்நல்லுடல் நெளிய நின்றுதகரமர்த் தனமே செய்தசங்கரி மருகன் கைவேல்நிகழெனை நிருதி திக்கல்நிலைபெறக் காக்க; மேற்கில்இகல்அயில் காக்க, வாயுவினில்குகன் கதிர்வேல் காக்க.
வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க;விடையுடை யீசன் திக்கில்வேதபோதகன்வேல் காக்க;நடக்கையில் இருக்கும் ஞான்றும்நவில்கையில் நிமிர்கையில் கீழ்க்கிடக்கையில் தூங்கும் ஞான்றும்கிரிதுளைத் துளவேல் காக்க.
இழந்து போகாத வாழ்வைஈயும் முத்தையனார் கைவேல்வழங்கும் நல்லூண் உண்போதும்மால்விளை யாட்டின் போதும்பழஞ்சுரர் போற்றும் பாதம்பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்செழுங்குணத் தோடே காக்க;திடமுடன் மயிலும் காக்க.
இளமையில் வாலிபத்தில்ஏறிடு வயோதி கத்தில்வளர்அறு முகச்சி வன்தான்வந்தெனைக் காக்க காக்க.ஒளியெழு காலை முன்எல்ஓம்சிவ சாமி காக்க.தெளிநடு பிற்ப கல்கால்சிவகுரு நாதன் காக்க.
இறகுடைக் கோழித் தோகைக்குஇறைமுன் இராவில் காக்க;திறலுடைச் சூர்ப்ப கைத்தேதிகழ்பின் இராவில் காக்க;நறவுசேர் தாள்சி லம்பன்நடுநிசி தன்னில் காக்க;மறைதொழு குழகன் எம்கோன்மாறாது காக்க காக்க.
இனமெனத் தொண்ட ரோடும்இணக்கிடும் செட்டி காக்க;தனிமையில் கூட்டந் தன்னில்சரவண பவனார் காக்க;நனியனு பூதி சொன்னநாதர்கோன் காக்க; இத்தைக்கனிவொடு சொன்ன தாசன்கடவுள்தான் காக்க வந்தே.
திருச்சிற்றம்பலம்
பொருள் / விளக்கம்
முப்பது பாடல்களும் தமிழ் எழுத்துகளின் வரிசையில் (அ, ஆ, இ, ஈ …) தொடங்குவது இக்கவசத்தின் தனிச் சிறப்பு. உடல் உறுப்புகள், பகல், இரவு, தனிமை, கூட்டம் என எல்லா நிலைகளிலும் முருகனின் பல திருநாமங்கள் காக்க வேண்டும் என்று வேண்டுகிறது.
பாராயணம்: நோய், அச்சம், பகை நீங்க தினமும் அல்லது சஷ்டி, கிருத்திகை நாட்களில் பாராயணம் செய்வது வழக்கம்.