திருப்புகழ்

ஏறுமயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே

Erumayil Eri Vilayadu Mugam Ondre — Lyrics in Tamil

அருளியவர்: அருணகிரிநாதர் · திருப்புகழ் — முருகன் துதி

முருகனின் ஆறு முகங்களும் ஒவ்வொன்றும் என்ன செய்கின்றன என்று அழகாக விவரிக்கும் அருணகிரிநாதரின் பிரபலமான பாடல்.

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றேஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றேகூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றேகுன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றேவள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றேஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

பொருள் / விளக்கம்

ஆறு முகங்களின் பணி:

  1. மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று;
  2. தந்தை ஈசனுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த முகம் ஒன்று;
  3. போற்றும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கும் முகம் ஒன்று;
  4. கிரௌஞ்ச மலையைப் பிளக்க வேல் ஏந்திய முகம் ஒன்று;
  5. பகைத்த சூரனை வதைத்த முகம் ஒன்று;
  6. வள்ளியை மணக்க வந்த முகம் ஒன்று.

"ஆறுமுகமான பொருளை நீயே எனக்கு அருள வேண்டும், திருவண்ணாமலையில் (ஆதி அருணாசலம்) அமர்ந்த பெருமானே" என்று நிறைவுறுகிறது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க ஏற்ற எளிய, இனிய பாடல்.