கவசம்

கந்த சஷ்டி கவசம்

Kandha Sashti Kavasam — Lyrics in Tamil

அருளியவர்: தேவராய சுவாமிகள்

முருகப் பெருமானிடம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் காக்க வேண்டி பாடப்பட்ட கவசம். சஷ்டி விரதக் காலத்திலும் தினசரியும் பாராயணம் செய்யப்படுகிறது.

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்துவரவர வேலா யுதனார் வருகவருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்றிமந்திர வடிவேல் வருக வருக!வாசவன் மருகா வருக வருகநேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருகநீறிடும் வேலவன் நித்தம் வருகசிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ர ர ர ர ர ர ரரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரிவிநபவ சரஹண வீரா நமோநமநிபவ சரஹண நிறநிற நிறென

வசர வணப வருக வருகஅசுரர் குடிகெடுத்த ஐயா வருகஎன்னை ஆளும் இளையோன் கையில்பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்கவிரைந்தெனைக் காக்க வேலோன் வருகஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்துநன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்செப்பழ குடைய திருவயி றுந்தியும்துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இருதொடை யழகும் இணைமுழந் தாளும்திருவடி யதனில் சிலம்பொலி முழங்கசெககண செககண செககண செகணமொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகெனடிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுணரரரர ரரரர ரரரர ரரரரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடுடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகுவிந்து விந்து மயிலோன் விந்துமுந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வமைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்லாலா லாலா லாலா வேசமும்லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்எந்தலை வைத்துன் இணையடி காக்கஎன்னுயிர்க் குயிராம் இறைவன் காக்கபன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்கபொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்ககதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்கவிழி செவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்கபேசிய வாய்தனைப் பெருவேல் காக்கமுப்பத் திருபல் முனைவேல் காக்கசெப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்கஎன்னிளங் கழுத்தை இனியவேல் காக்கமார்பை ரத்ன வடிவேல் காக்கசேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்கபிடரிக ளிரண்டும் பெருவேல் காக்கஅழகுடன் முதுகை அருள்வேல் காக்கபழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்கசிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்கநாணாங் கயிற்றை நல்வேல் காக்கஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்கவட்டக் குதத்தை வடிவேல் காக்கபணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்கஐவிரல் அடியினை அருள்வேல் காக்ககைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்கபின்கையி ரண்டும் பின்னவள் இருக்கநாவில் சரஸ்வதி நற்றுணை யாகநாபிக் கமலம் நல்வேல் காக்கமுப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்கஅடியேன் வசனம் அசைவுள நேரம்கடுகவே வந்து கனகவேல் காக்கவரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்கஅரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்கதாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்ககாக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்க தாக்க தடையறத் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபடபில்லி சூனியம் பெரும்பகை அகலவல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்அல்லற் படுத்தும் அடங்கா முனியும்பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிடஇரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்தண்டியக் காரரும் சண்டாளர் களும்என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்காசும் பணமும் காவுடன் சோறும்ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திடமாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிடகாலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிடஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோடபடியினில் முட்ட பாசக் கயிற்றால்கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுகட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டுமுட்டு முட்டு முழிகள் பிதுங்கிடசெக்கு செக்கு செதில் செதிலாகசொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்பற்று பற்று பகலவன் தணலெரிதணலெரி தணலெரி தணலது வாகவிடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடதேளும் பாம்பும் செய்யான் பூரான்கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்கஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதிபக்கப் பிளவை படர்தொடை வாழைகடுவன் படுவன் கைத்தாள் சிலந்திபற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்நில்லா தோட நீஎனக் கருள்வாய்ஈரேழு உலகமும் எனக் குறவாகஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்உன்னைத் துதிக்க உன் திரு நாமம்சரவண பவனே சைலொளி பவனேதிரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனேஅரிதிரு மருகா அமரா வதியைக்காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனைஇடும்பனை யழித்த இனியவேல் முருகாதனிகா சலனே சங்கரன் புதல்வாகதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாராஆவினன் குடிவாழ் அழகிய வேலாசெந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயாசமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்என்நா இருக்க யானுனைப் பாடஎனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியைநேச முடன்யான் நெற்றியில் அணியபாச வினைகள் பற்றது நீங்கிஉன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்மெத்தமெத் தாக வேலா யுதனார்சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்கவாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்கவாழ்க வாழ்க மலைக்குரு வாழ்கவாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்கஎத்தனை குறைகள் எத்தனை பிழைகள்எத்தனை அடியேன் எத்தனை செயினும்பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமேபிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்துமைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பியபாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்காலையில் மாலையில் கருத்துடன் நாளும்ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டுஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடிஅறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்சூரபத் மாவைத் துணித்தகை யதனால்இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்சின்னக் குழந்தை சேவடி போற்றி!எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்

மேவிய வடிவுறும் வேலவா போற்றி!தேவர்கள் சேனா பதியே போற்றி!குறமகள் மனமகிழ் கோவே போற்றி!திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!கடம்பா போற்றி கந்தா போற்றி!வெட்சி புனையும் வேலே போற்றி!உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!

மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!சரணம் சரணம் சரவண பவஓம்சரணம் சரணம் சண்முகா சரணம்!சரணம் சரணம் சண்முகா சரணம்!

பொருள் / விளக்கம்

திருச்செந்தூர் முருகன் மீது தேவராய சுவாமிகள் பாடிய கவசம் இது. "கவசம்" என்றால் போர்வீரர் அணியும் பாதுகாப்புக் கவசம் — தலை முதல் பாதம் வரை உடலின் ஒவ்வொரு உறுப்பையும் முருகனின் வேல் காக்க வேண்டும் என்று வேண்டுவதால் இப்பெயர் பெற்றது.

அமைப்பு: காப்பு (வெண்பா), பின் நூல். "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் பீஜாட்சரங்களும், "காக்க காக்க கனகவேல் காக்க" என்ற புகழ்பெற்ற வரிகளும் இதில் உள்ளன.

பாராயணம்: ஐப்பசி மாத கந்த சஷ்டி விரதத்தின் ஆறு நாட்களிலும், தினமும் காலை மாலை இரு வேளையிலும் பாராயணம் செய்வது மரபு. நூலின் நிறைவுப் பகுதி "ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்டு" ஜபிப்பதன் பலனைக் கூறுகிறது.

தேவராய சுவாமிகள் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே சஷ்டி கவசங்கள் பாடியதாகக் கூறப்படுகிறது; இங்குள்ளது பரவலாகப் பாடப்படும் திருச்செந்தூர்க் கவசம்.