ஸ்லோகம்

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்

Shadananam Kumkuma Raktha Varnam — Lyrics in Tamil

ஆறுமுகப் பெருமானைச் சரணடையும் முருகன் தியான ஸ்லோகம். தினசரி பூஜையிலும் செவ்வாய், சஷ்டி நாட்களிலும் சொல்லப்படுகிறது.

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்ருத்ரஸ்ய ஸூனும் ஸுரஸைன்ய நாதம்குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

பொருள் / விளக்கம்

ஷடானனம் — ஆறு முகங்களை உடையவரும்,
குங்கும ரக்த வர்ணம் — குங்குமம் போன்ற செந்நிறம் கொண்டவரும்,
மஹாமதிம் — பேரறிவாளரும்,
திவ்ய மயூர வாஹனம் — தெய்வீக மயிலை வாகனமாகக் கொண்டவரும்,
ருத்ரஸ்ய ஸூனும் — சிவபெருமானின் மைந்தரும்,
ஸுரஸைன்ய நாதம் — தேவர் சேனையின் தலைவருமான
குஹம் — குகனை (முருகனை)
அஹம் ஸதா சரணம் ப்ரபத்யே — நான் எப்போதும் சரணடைகிறேன்.