போற்றித் திருவகவல்
Potri Thiruvagaval — Lyrics in Tamil
"நான்முகன் முதலா வானவர் தொழுது எழ" என்று தொடங்கி, நூற்றுக்கணக்கான "போற்றி"களால் சிவபெருமானை வணங்கும் மாணிக்கவாசகரின் 225 அடி அகவல்.
Also known as: Potri Thiru Agaval · Pottri Thiruvagaval · Thiruvasagam Potri Agaval
நான்முகன் முதலா வானவர் தொழுது எழஈர் அடியாலே மூவுலகு அளந்துநால் திசை முனிவரும் ஐம்புலன் மலரப்போற்றி செய் கதிர்முடித் திருநெடுமால் அன்றுஅடிமுடி அறியும் ஆதரவு அதனில்
கடும் முரண் ஏனம் ஆகிமுன் கலந்துஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்துஊழி முதல்வ சயசய என்றுவழுத்தியும் காணா மலர்அடி இணைகள்வழுத்துதற்கு எளிதாய் வார் கடல் உலகினில்
யானை முதலா எறும்பு ஈறாயஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்துஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்தக்க தசமதி தாயொடு தான்படும்துக்க சாகரம் துயர் இடைப்பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலைஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்காலை மலமொடு கடும்பகல் பசி நிசிவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்துஎய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்துஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிமுனிவு இலாதது ஓர் பொருள் அது கருதலும்ஆறு கோடி மாயா சக்திகள்வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடிநாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்விரதமே பரம் ஆக வேதியரும்
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்சமய வாதிகள் தம்தம் தங்களேஅமைவது ஆக அரற்றி மலைந்தனர்மிண்டிய மாயா வாதம் என்னும்சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து
உலோகா யதமெனும் ஒண்டிறப் பாம்பின்கலா பேதத்த கடுவிடம் எய்திஅதில் பெருமாயை எனைப்பல சூழவும்தப்பாமே தாம் பிடித்தது சலியாத்தழலது கண்ட மெழுகு அது போலத்
தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்துஆடியும் அலறியும் பாடியும் பரவியும்கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனபடியே ஆகி நல் இடைஅறா அன்பின்பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
கசிவது பெருகிக் கடல் என மறுகிஅகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்சகம் பேய் என்று தம்மைச் சிரிப்பநாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரைபூண் அது ஆகக் கோணுதல் இன்றிச்
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்கதியது பரமா அதிசயம் ஆகக்கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாதுஅருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்பிறிவினை அறியா நிழல் அது போலமுன் பின்னாகி முனியாது அத்திசைஎன்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி
அன்பு எனும் ஆறு கரை அது புரளநன்புலன் ஒன்றி நாத என்று அரற்றிஉரை தடுமாறி உரோமம் சிலிர்ப்பகரமலர் மொட்டித்து இருதயம் மலரக்கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்தாயே ஆகி வளர்த்தனை போற்றிமெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்கைதரவல்ல கடவுள் போற்றிஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றிதென் தில்லை மன்றினுள் ஆடி போற்றிஇன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றிமூவா நான்மறை முதல்வா போற்றிசேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றிகல் நார் உரித்த கனியே போற்றிகாவாய் கனகக் குன்றே போற்றிஆ ஆ என்தனக்கு அருளாய் போற்றிபடைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றிஈச போற்றி இறைவா போற்றிதேசப் பளிங்கின் திரளே போற்றிஅரைசே போற்றி அமுதே போற்றிவிரை சேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றிஆதி போற்றி அறிவே போற்றிகதியே போற்றி கனியே போற்றிநதி நேர் நெஞ்சடை நம்பா போற்றிஉடையாய் போற்றி உணர்வே போற்றி
கடையேன் அடிமை கண்டாய் போற்றிஐயா போற்றி அணுவே போற்றிசைவா போற்றி தலைவா போற்றிகுறியே போற்றி குணமே போற்றிநெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றிஏனோர்க்கு எளிய இறைவா போற்றிமூவேழ் சுற்றமும் முரண் உறு நரகு இடைஆழாமே அருள் அரசே போற்றிதோழா போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றிமுத்தா போற்றி முதல்வா போற்றிஅத்தா போற்றி அரனே போற்றிஉரைஉணர்வு இறந்த ஒருவ போற்றிவிரிகடல் உலகின் விளைவே போற்றி
அருமையில் எளிய அழகே போற்றிகருமுகி லாகிய கண்ணே போற்றிமன்னிய திருவருள் மலையே போற்றிஎன்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றிஅழிவிலா ஆனந்த வாரி போற்றிஅழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றிமுழுவதும் இறந்த முதல்வா போற்றிமான்நேர் நோக்கி மணாளா போற்றி
வான்அகத்து அமரர் தாயே போற்றிபார்இடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றிநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றிதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றிவளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றிஅளிபவர் உள்ளதது அமுதே போற்றிகனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றிநனவிலும் நாயேற்கு அருளினை போற்றிஇடைமருது உறையும் எந்தாய் போற்றி
சடைஇடைக் கங்கை தரித்தாய் போற்றிஆரூர் அமர்ந்த அரசே போற்றிசீர் ஆர் திருவையாறா போற்றிஅண்ணாமலை எம் அண்ணா போற்றிகண் ஆர் அமுதக் கடலே போற்றி
ஏகம்பத்து உறை எந்தாய் போற்றிபாகம் பெண் உரு ஆனாய் போற்றிபராய்த் துறை மேவிய பரனே போற்றிசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றிமற்று ஓர் பற்று இங்கு அறியோன் போற்றி
குற்றாலத்து எம் கூத்தா போற்றிகோகழி மேவிய கோவே போற்றிஈங்கோய் மலை எந்தாய் போற்றிபாங்கு ஆர் பழனத்து அழகா போற்றிகடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க்கு அருளும் அப்பா போற்றிஇத்தி தன்னின் கீழ் இருமூவர்க்குஅத்திக்கு அருளிய அரசே போற்றிதென்னாடுடைய சிவனே போற்றிஎன் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக்கு அருளினை போற்றிமானக் கயிலை மலையாய் போற்றிஅருளிட வேண்டும் அம்மான் போற்றிஇருள் கெட அருளும் இறைவா போற்றிதளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களம் கொளக் கருத அருளாய் போற்றிஅஞ்சேல் என்று இங்கு அருளாய் போற்றிநஞ்சே அமுதா நயந்தாய் போற்றிஅத்தா போற்றி ஐயா போற்றிநித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றிபெரியாய் போற்றி பிரானே போற்றிஅரியாய் போற்றி அமலா போற்றிமறையோர் கோல நெறியே போற்றிமுறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே போற்றி உயிரே போற்றிசிறவே போற்றி சிவமே போற்றிமஞ்சா போற்றி மணாளா போற்றிபஞ்சு ஏர் அடியான் பங்கா போற்றிஅலந்தேன் நாயேன் அடியேன் போற்றி
இலங்கு சுடர் எம் ஈசா போற்றிசுவைத்தலை மேவிய கண்ணே போற்றிகுவைப்பதி மலிந்த கோவே போற்றிமலை நாடு உடைய மன்னே போற்றிகலை ஆர் அரிகேசரியாய் போற்றி
திருக்கழுக் குன்றில் செல்வா போற்றிபொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றிஅருவமும் உருவமும் ஆனாய் போற்றிமருவிய கருணை மலையே போற்றிதுரியமும் இறந்த சுடரே போற்றி
தெரிவு அரிது ஆகிய தெளிவே போற்றிதேளா முத்தச் சுடரே போற்றிஆள் ஆனவர்களுக்கு அன்பா போற்றிஆரா அமுதே அருளா போற்றிபேர் ஆயிரம் உடைப் பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றிநீள் ஒளி ஆகிய நிருத்தா போற்றிசந்தனச் சாந்தின் சுந்தர போற்றிசிந்தனைக்கு அரிய சிவமே போற்றிமந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றிபுலிமுலை புல் வாய்க்கு அருளினை போற்றிஅலைகடல் மீ மிசை நடந்தாய் போற்றிகரும் குருவிக்கு அன்று அருளினை போற்றிஇரும் புலன் புலர இசைந்தனை போற்றி
படி உறப் பயின்ற பாவக போற்றிஅடியொடு நடு ஈறு ஆனாய் போற்றிநரகொடு சுவர்க்க நானிலம் புகாமல்பரகதி பாண்டியற்கு அருளினை போற்றிஒழவற நிறைந்த ஒருவ போற்றி
செழு மலர்ச் சிவபுரத்து அரசே போற்றிகழு நீர் மாலைக் கடவுள் போற்றிதொழுவார் மையல் துணிப்பாய் போற்றிபிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன்குழைத்த சொல்மாலை கொண்டருள் போற்றி
புரம்பல் எரித்த புராண போற்றிபரம் பரம் சோதிப் பரனே போற்றிபோற்றி போற்றி புயங்கப் பெருமான்போற்றி போற்றி புராண காரணபோற்றி போற்றி சய சய போற்றி
திருச்சிற்றம்பலம்
பொருள் / விளக்கம்
திருவாசகத்தின் நான்காம் பகுதி; தில்லையில் (சிதம்பரம்) அருளியது. முதல் பகுதி, யானை முதல் எறும்பு வரை எல்லாப் பிறவிகளிலும் தப்பிப் பிழைத்து, தாயின் கருவிலிருந்து ஒவ்வொரு வயதிலும் வந்த இடர்களைக் கடந்து, இறைவனின் அருளால் காக்கப்பட்டதை நன்றியுடன் நினைவுகூர்கிறது.
பின்னர் "போற்றி" என்று முடியும் வரிகள் அருவியாகப் பெருகுகின்றன — சிவபெருமானின் திருநாமங்கள், திருத்தலங்கள், திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் போற்றி, "போற்றி போற்றி சய சய போற்றி" என்று நிறைவுறுகிறது.
பாராயணம்: சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை நாட்களிலும், சிவாலயங்களில் அர்ச்சனையின்போதும் ஓதப்படுகிறது.