பதிகம்

திருநீற்றுப் பதிகம்

Thiruneetru Pathigam — Lyrics in Tamil

அருளியவர்: திருஞானசம்பந்தர்நூல்: தேவாரம் — இரண்டாம் திருமுறை (திருஆலவாய்)

"மந்திரமாவது நீறு" என்று தொடங்கும் திருநீற்றின் பெருமையைப் போற்றும் பதிகம். மதுரை ஆலவாய் இறைவன் மீது திருஞானசம்பந்தர் பாடியது.

Also known as: Manthiramavathu Neeru · Thiruneetru Thiruppathigam

பகிர்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறுசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறுதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறுசெந்துவர் வாயுமை பங்கன் றிருவால வாயான் றிருநீறே

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறுபோதந் தருவது நீறு புன்மை தவிர்பது நீறுஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறுசீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறுசத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறுபத்தி தருவது நீறு பரவ வினியது நீறுசித்தி தருவது நீறு திருவால வாயான் றிருநீறே

காண வினியது நீறு கவினைத் தருவது நீறுபேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறுமாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறுசேணந் தருவது நீறு திருவால வாயான் றிருநீறே

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறுபேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறுதேசம் புகழ்வது நீறு திருவால வாயான் றிருநீறே

அருத்தமதாவது நீறு அவல மறுப்பது நீறுவருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறுபொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறுதிருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் றிருநீறே

எயிலது வட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறுபயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறுதுயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறுஅயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான்றிரு நீறே

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறுபராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறுதராவண மாவது நீறு தத்துவ மாவது நீறுஅராவணங் குந்திரு மேனி யாலவா யான்றிரு நீறே

மாலோ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறுமேலுறை தேவர்க டங்கண் மெய்யது வெண்பொடி நீறுஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறுஆலமு துண்டமி டற்றெம் மாலவா யான்றிரு நீறே

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறுஎண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறுஅண்டத் தவருபணிந் தேத்து மாலவா யான்றிரு நீறே

ஆற்ற லடல்விடை யேறு மாலவா யான்றிரு நீற்றைபோற்றிப் புகலிநி லாவும் பூசுரன் ஞானசம் பந்தன்தேற்றித் தென்னனுட லுற்ற தீப்பிணி யாயின தீரச்சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

பொருள் / விளக்கம்

பாண்டிய மன்னனின் (கூன் பாண்டியன்) கொடிய வெப்பு நோய் நீங்க, திருஞானசம்பந்தர் திருநீறு பூசி இப்பதிகத்தைப் பாடினார் என்பது வரலாறு — பதினொன்றாம் பாடலில் "தென்னன் உடலுற்ற தீப்பிணி ஆயின தீர" என்று இது குறிப்பிடப்படுகிறது.

திருநீறு மந்திரமாகவும், அழகாகவும், வேதத்தின் சாரமாகவும், துயர் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பதை ஒவ்வொரு பாடலும் போற்றுகிறது. நோய் நீங்கவும், திருநீறு அணியும்போதும் இதைச் சொல்வது வழக்கம்.