திருமுறை

சிவபுராணம்

Sivapuranam — Lyrics in Tamil

அருளியவர்: மாணிக்கவாசகர்நூல்: திருவாசகம் (எட்டாம் திருமுறை)

திருவாசகத்தின் முதல் பகுதி. "நமச்சிவாய வாழ்க" என்று தொடங்கும் 95 அடிகள் கொண்ட சிவ துதி. திருப்பெருந்துறையில் அருளியது.

Also known as: Siva Puranam · Sivapuranam Lyrics · Namachivaya Vazhga

பகிர்

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்கஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்ககோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்கஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்கஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்ககரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்கசிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றிதேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றிநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றிமாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றிசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றிஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னைமுந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்திஎண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சிவிண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்றமெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலாபொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளிமெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரேஎஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானேமாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்றுபிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்தமறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளைஅறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிபுறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலைமலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்குகலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்நலம் தான் இலாத சிறியேற்கு நல்கிநிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனேமாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரேதேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனேபாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனேநேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறேஆரா அமுதே அளவிலாப் பெம்மானேஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானேநீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானேஇன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனேஆதியனே அந்தம் நடுவாகி அல்லானேஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானேகூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வேபோக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனேகாக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியேஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்றதோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்ஊற்றான உண்ணார் அமுதே உடையானேவேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்பஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமேகள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானேநள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனேதில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்றுசொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

பொருள் / விளக்கம்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பகுதி சிவபுராணம். சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திருவாசகம் போற்றப்படுகிறது. "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது பழமொழி.

அமைப்பு: 95 அடிகள் கொண்ட கலிவெண்பா. முதல் பகுதி "வாழ்க", "வெல்க", "போற்றி" என இறைவனின் திருவடிகளை வாழ்த்துகிறது. பின்னர் புல், பூண்டு, புழு, மரம், விலங்கு, பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள், அசுரர், முனிவர், தேவர் என எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்த உயிர், இறைவனின் பொன்னடி கண்டு வீடுபேறு அடைந்ததைப் பாடுகிறது.

பாராயணம்: சிவாலயங்களிலும் வீடுகளிலும், பிரதோஷம், சிவராத்திரி, திங்கட்கிழமைகளில் சிறப்பாகவும், இறுதிச் சடங்குகளிலும் பாடப்படுகிறது. தொடக்கத்திலும் நிறைவிலும் "திருச்சிற்றம்பலம்" என்று சொல்வது மரபு.