ஸ்லோகம்

கர்பூர கௌரம் கருணாவதாரம்

Karpura Gauram Karunavataram — Lyrics in Tamil

கற்பூரம் போல வெண்மையான சிவபெருமானைப் பார்வதியுடன் வணங்கும் ஸ்லோகம். கற்பூர ஆரத்தி காட்டும்போது சொல்லப்படுகிறது.

Also known as: Karpoora Gauram · Shiva Aarti Sloka

பகிர்

கர்பூர கௌரம் கருணாவதாரம்ஸம்ஸார ஸாரம் புஜகேந்த்ர ஹாரம்ஸதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தேபவம் பவானீ ஸஹிதம் நமாமி

பொருள் / விளக்கம்

கர்பூர கௌரம் — கற்பூரம் போல வெண்மையானவரும்,
கருணாவதாரம் — கருணையின் வடிவமானவரும்,
ஸம்ஸார ஸாரம் — உலக வாழ்வின் சாரமானவரும்,
புஜகேந்த்ர ஹாரம் — நாகராஜனை மாலையாக அணிந்தவரும்,
ஸதா ஹ்ருதய அரவிந்தே வஸந்தம் — எப்போதும் இதயத் தாமரையில் வசிப்பவருமான
பவம் பவானீ ஸஹிதம் நமாமி — பவானியுடன் கூடிய சிவபெருமானை வணங்குகிறேன்.