வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்
Vakkundam Nalla Manamundam — Lyrics in Tamil
ஔவையாரின் மூதுரை நூலின் காப்புச் செய்யுள். குழந்தைகள் முதலில் கற்கும் விநாயகர் வணக்கப் பாடல்.
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு
பொருள் / விளக்கம்
பவளம் போன்ற சிவந்த திருமேனியும் தும்பிக்கையும் கொண்ட விநாயகரின் திருவடிகளை, மலர் கொண்டு தவறாமல் வணங்குபவர்களுக்கு —
- வாக்கு உண்டாம் — நல்ல சொல்வன்மை உண்டாகும்,
- நல்ல மனம் உண்டாம் — நல்ல எண்ணம் உண்டாகும்,
- மாமலராள் நோக்கு உண்டாம் — தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் (லட்சுமியின்) அருட்பார்வை கிடைக்கும்,
- மேனி நுடங்காது — உடல் நோயால் தளராது.