சுக்லாம்பரதரம் விஷ்ணும்
Shuklambaradharam Vishnum — Lyrics in Tamil
பூஜை, ஹோமம், எந்த நற்காரியத்தின் தொடக்கத்திலும் தலையில் குட்டிக்கொண்டு சொல்லப்படும் விநாயகர் தியான ஸ்லோகம். தடைகள் நீங்க வேண்டிச் சொல்லப்படுகிறது.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
பொருள் / விளக்கம்
சுக்லாம்பரதரம் — வெண்ணிற ஆடை அணிந்தவரும்,
விஷ்ணும் — எங்கும் நிறைந்தவரும்,
சசிவர்ணம் — நிலவின் நிறம் கொண்டவரும்,
சதுர்புஜம் — நான்கு கைகளை உடையவரும்,
ப்ரஸன்ன வதனம் — மலர்ந்த முகம் கொண்டவருமான (விநாயகரை)
ஸர்வ விக்ன உபசாந்தயே த்யாயேத் — எல்லாத் தடைகளும் நீங்க தியானிக்க வேண்டும்.
சொல்லும்போது இரு கைகளாலும் நெற்றிப் பொட்டில் மெதுவாகக் குட்டிக்கொள்வது வழக்கம்.