ஸ்லோகம்

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்

Gajananam Bhoota Ganadhi Sevitam — Lyrics in Tamil

எந்தச் செயலைத் தொடங்கும் முன்பும் சொல்லப்படும் விநாயகர் ஸ்லோகம். இந்தத் தளத்தின் பெயரும் இதிலிருந்தே.

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்உமாஸுதம் சோக விநாச காரணம்நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்

பொருள் / விளக்கம்

கஜானனம் — யானை முகம் கொண்டவரும்,
பூதகணாதி ஸேவிதம் — பூத கணங்கள் முதலானோரால் வணங்கப்படுபவரும்,
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் — விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை விரும்பி உண்பவரும்,
உமாஸுதம் — உமையவளின் மைந்தரும்,
சோக விநாச காரணம் — துன்பங்களை அழிப்பவருமான
விக்னேஸ்வர பாதபங்கஜம் நமாமி — விக்னேஸ்வரரின் தாமரைத் திருவடிகளை வணங்குகிறேன்.

எந்தச் செயலையும் தொடங்கும் முன், பூஜையின் தொடக்கத்தில், படிப்பு தொடங்கும் முன் இந்த ஸ்லோகத்தைச் சொல்வது வழக்கம்.