திருப்புகழ்

கைத்தல நிறைகனி — திருப்புகழ் விநாயகர் துதி

Kaithala Niraikani (Thiruppugazh) — Lyrics in Tamil

அருளியவர்: அருணகிரிநாதர் · திருப்புகழ்

"கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி" — திருப்புகழின் தொடக்கத்தில் உள்ள விநாயகர் துதி. கணபதியின் அருளால் முருகன் வள்ளியை மணந்த கதையைக் குறிப்பிடுகிறது.

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரிகப்பிய கரிமுகன் அடிபேணிக்கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவகற்பக மெனவினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்மற்பொரு திரள்புய மதயானைமத்தள வயிறனை உத்தமி புதல்வனைமட்டவிழ் மலர்கொடு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்முற்பட எழுதிய முதல்வோனேமுப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்அச்சது பொடிசெய்த அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்அப்புன மதனிடை இபமாகிஅக்குற மகளுடன் அச்சிறு முருகனைஅக்கண மணமருள் பெருமாளே.

பொருள் / விளக்கம்

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் நூலின் காப்புப் பாடல் இது; கச்சேரிகளிலும் பஜனைகளிலும் முதலில் பாடப்படுவது.

பொருள்:

  • கை நிறையப் பழங்கள், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை உண்ணும் யானைமுகனின் அடிகளைப் போற்றி — கற்கும் அடியவர்களின் அறிவில் உறைபவனே, கற்பகமே என்று நினைப்பவர்களின் வினைகள் விரைந்து நீங்கும்.
  • ஊமத்தம் பூவும் பிறையும் சூடிய சிவனின் மகனை, பெருத்த வயிறுடைய உமையின் புதல்வனைத் தேன் சொரியும் மலர்களால் பணிவேன்.
  • முத்தமிழை (மகாபாரதத்தை) மேரு மலையில் முதலில் எழுதியவனே; முப்புரம் எரித்த சிவனின் தேர் அச்சை முறித்த தீரனே!
  • வள்ளி வாழ்ந்த தினைப்புனத்தில் யானை வடிவில் தோன்றி, அவளை அச்சுறுத்தி முருகனிடம் சேர்த்து, அக்கணமே மணம் முடித்து வைத்த பெருமானே!