திருமுறை

அச்சப் பத்து

Achcha Pathu — Lyrics in Tamil

அருளியவர்: மாணிக்கவாசகர்நூல்: திருவாசகம் (எட்டாம் திருமுறை)

"புற்றில் வாள் அரவும் அஞ்சேன்" — பாம்பு, எமன், நோய், பிறவி எதற்கும் அஞ்சேன்; சிவனிடம் அன்பு இல்லாதவர்களைக் கண்டால்தான் அஞ்சுவேன் என்று பாடும் மாணிக்கவாசகரின் பத்துப் பாடல்கள்.

Also known as: Acha Pathu · Achappathu Thiruvasagam · Putril Vaal Aravum Anjen

பகிர்

புற்றில் வாள் அரவும் அஞ்சேன்; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்குஅற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

வெருவரேன், வேட்கை வந்தால்; வினைக் கடல் கொளினும், அஞ்சேன்;இருவரால் மாறு காணா எம்பிரான், தம்பிரான், ஆம்திரு உரு அன்றி, மற்று ஓர் தேவர், எத் தேவர்? என்னஅருவராதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

வன் புலால் வேலும் அஞ்சேன்; வளைக் கையார் கடைக் கண் அஞ்சேன்;என்பு எலாம் உருக நோக்கி, அம்பலத்து ஆடுகின்றஎன் பொலா மணியை ஏத்தி, இனிது அருள் பருக மாட்டாஅன்பு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

கிளி அனார் கிளவி அஞ்சேன்; அவர் கிறி முறுவல் அஞ்சேன்;வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி,துளி உலாம் கண்ணர் ஆகி, தொழுது, அழுது, உள்ளம் நெக்கு, இங்கு,அளி இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;துணி நிலா அணியினான் தன் தொழும்பரோடு அழுந்தி, அம் மால்,திணி நிலம் பிளந்தும், காணாச் சேவடி பரவி, வெண் நீறுஅணிகிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

வாள் உலாம் எரியும் அஞ்சேன்; வரை புரண்டிடினும், அஞ்சேன்;தோள் உலாம் நீற்றன், ஏற்றன், சொல் பதம் கடந்த அப்பன்,தாள் தாமரைகள் ஏத்தி, தட மலர் புனைந்து, நையும்ஆள் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

தகைவு இலாப் பழியும் அஞ்சேன்; சாதலை முன்னம் அஞ்சேன்;புகை முகந்து எரி கை வீசி, பொலிந்த அம்பலத்துள் ஆடும்,முகை நகைக் கொன்றை மாலை, முன்னவன் பாதம் ஏத்தி,அகம் நெகாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

தறி செறி களிறும் அஞ்சேன்; தழல் விழி உழுவை அஞ்சேன்;வெறி கமழ் சடையன், அப்பன், விண்ணவர் நண்ண மாட்டாச்செறிதரு கழல்கள் ஏத்தி, சிறந்து, இனிது இருக்க மாட்டாஅறிவு இலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

மஞ்சு உலாம் உருமும் அஞ்சேன்; மன்னரோடு உறவும் அஞ்சேன்;நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய்,செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீண்ட மாட்டாது,அஞ்சுவார் அவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

கோண் இலா வாழி அஞ்சேன்; கூற்றுவன் சீற்றம் அஞ்சேன்;நீள் நிலா அணியினானை நினைந்து, நைந்து, உருகி, நெக்கு,வாழ் நிலாம் கண்கள் சோர, வாழ்த்திநின்று, ஏத்தமாட்டாஆண் அலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

திருச்சிற்றம்பலம்

பொருள் / விளக்கம்

திருவாசகத்தில் உள்ள "பத்து" வகைப் பதிகங்களில் ஒன்று. ஒவ்வொரு பாடலும் "அம்ம! நாம் அஞ்சுமாறே!" என்று நிறைவுறுகிறது.

புற்றில் இருக்கும் பாம்பு, பொய்யர்களின் சூழ்ச்சி, கூரிய வேல், பெண்களின் கடைக்கண், நோய், பிறப்பு இறப்பு, எமனின் சீற்றம் — எதற்கும் அஞ்சமாட்டேன். ஆனால் சிவபெருமானின் திருவடியை நினைந்து உருகாதவர்களை, திருநீறு அணியாதவர்களை, அன்பு இல்லாதவர்களைக் கண்டால் மட்டுமே அஞ்சுவேன் என்கிறார் மாணிக்கவாசகர். இறையன்பே உண்மையான பாதுகாப்பு என்பது இதன் உட்கருத்து.

பாராயணம்: பயம், மனக்கலக்கம் நீங்கத் தினமும் ஓதலாம்.