கந்தர் அலங்காரம்
Kandhar Alangaram — Lyrics in Tamil
"பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத" என்று தொடங்கும் அருணகிரிநாதரின் கட்டளைக் கலித்துறைப் பாடல்கள். முருகனின் அழகையும் வேலின் வீரத்தையும் அருளையும் போற்றுகிறது.
Also known as: Kandar Alangaram · Kanthar Alankaram · Skanda Alankaram
காப்பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்குவட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.
நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்சேற்றைக் கழிய வழிவிட்ட வா! செஞ்சடாடவிமேல்ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.
அழித்துப் பிறக்கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்எழுத்துப் பிழையறக் கற்கின்றீ லீரெரி மூண்டதென்னவிழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப்பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
ஓரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல ரிட்டுனதாள்சேரவொட் டாரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்கூரகட் டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே.
திருந்தப் புவனங்க ளீன்றபொற் பாவை திருமுலைப்பால்அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கைவிரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.
பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கைவிரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ளஅரும்புந் தனிப்பர மாநந்தந் தித்தித் தறிந்தவன்றேகரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே.
சளத்திற் பிணிபட்டசட்டுக் ரியைக்குட் டவிக்கு மென்றன்உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலேவெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்தெளிய விளம்பிய வா! முகமாறுடைத் தேசிகனே.
தேனென்று பாகென் றுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளிகோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோவானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்றுதானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே.
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கும்எல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்லகொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண்டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டதே.
படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகிழிந்துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்இடைபட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டு வெற்புங்கனகப்பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே.
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்தஇப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு முய்யச்சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.
தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் தொளக்கவை வேல்விடுங்கோ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.
வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப்பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.
சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்றுநின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தேவாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே.
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணைகிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுளசரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷாபரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.
மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்கஎய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரேவைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டுகைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே.
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்னகுன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனைமுன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.
தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத்தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்கண்டா யடாவந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே.
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்னசீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார் சிவயோகிகளேகாலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே.
ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குக்காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சைமாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.
வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சிமாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செயலாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்றுபோலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே.
கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்திடத்திற் புணையென யான் கடந் தேன் சித்ர மாதரல்குற்படத்திற் கழுத்திற் பழுத்தசெவ் வாயிற் பனையிலுந்தித்தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.
பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண்சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கைவேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே.
பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்துகொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்கக்கக் கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே.
கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தைவளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைத்த வதைக்குங் கண்ணார்க்கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்நாள் வந்திரட்சிப்பையே.
முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்குமிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே.
பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே.
பத்தித் துறையிழிந் தாநந்த வாரி படிவதினால்புத்தித் தரங்கந் தெளிவதென் றோபொங்கு வெங்குருதிமெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட சுட்டியிலேகுத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே.
சுழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங்கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்கிழித்தோடு வேலென் கிலையெங்ங னேமுத்தி கிட்டுவதே.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளைமொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டுடிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்தகோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிருதாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றாவிதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரகபதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழலமதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே.
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங்குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தைவணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே.
கவியாற் கடலடைத் தோன் மரு கோனைக் கணபணக்கட்செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற்குவியாக் கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே.
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிருகாலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப்பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே.
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்தமாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே.
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.
புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்முத்தியை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.
சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த்தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்றுநடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பைஇடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே.
சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுடநிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமாரகுமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்துவாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன்றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப்போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்தவாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.
ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தேதேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும்ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டுதூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே.
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகிஇழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.
பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம்இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே.
நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளிமுற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்செற்றார்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே.
பொங்கார வேலையில் வேலைவிட் டோ னருள் போலுதவஎங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்தவங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.
சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியைவந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன் மயில் வாகனனைச்சந்திக் கிலேன் பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன்புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்றபுரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்றுரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்டமாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன்காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.
பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்போதித்த நாதனைப் போர் வேலனைச்சென்று போற்றியுய்யச்சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்சாதித்த புத்திவந் தெங்கே யெனக் கிங்ஙன் சந்தித்ததே.
பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறியவெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப் போய்முட்டிப் பொருதசெவ் வேற்பொரு மாள் திரு முன்புநின்றேன்கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்எட்டுங் குலகிரி யெட்டும் விட் டோ ட வெட் டாதவெளிமட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே.
நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம்பார்க்கு மிடத் தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தேஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத்தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லிஇறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.
சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலேஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதிநின்றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே.
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்கந்தச் சுவாமி யெனைத் தேற் றிய பின்னர்க் காலன் வெம்பிவந்திப் பொழுதென்னை யென் செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே.
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றாமொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்தபழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனிவழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்னகருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே.
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளிகாந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்வாக்கும் வடிவு முடிவுமில்லாத தொன்று வந்துவந்துதாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தேஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே.
அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டுங் கொடிய ஐவர்பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே.
படிக்கின் றிலைபழு நித்திரு நாமம் படிப்பவர்தாள்முடிக்கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட்டுமிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மிநடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.
கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்ததாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டைந்தாள்சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ் சேரஎண்ணிமால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவேகால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டுநூல் வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.
கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண்டாடுவிர்காள்போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும்ஆர்கொண்டு போவரையோ கெடுவீர்நும் மறிவின்மையே.
பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகாகொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்கந்தா இளங்குமரா அமராவதி காவலனே!
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னேதோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித்த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.
தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ்சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவேவாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.
தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கேபுகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்ட ரீகனண்டமுகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப்பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.
தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கேபூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசைதாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்வாங்கி யனுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.
மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்பைவருங் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப்புகட்டின்வீட்டிற் புகுதன் மிகவெளி தேவிழி நாசிவைத்துமூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளேஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.
வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச்சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்பாலா யுதம் வருமோயம னோடு பகைக்கினுமே.
குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்டதமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே.
வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங்கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய்நிணங்கக்க விக்ரம வேலா யுதந் தொட்ட நிர்மலனே.
பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளைதங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்பொங்கோதம் வாய்விடப் பொன்னுஞ் சிலம்பு புலம்பவரும்எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே.
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்குமேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழநாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டுவருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்பொருமா வினைச் செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.
தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த ஞானமெனுந்தண்டையம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர்மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டிமிண்டக்கண்டுருண் டண்டர்விண் டோ டாமல் வேல்தொட்ட காவலனே.
மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்தவிண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.
தெள்ளிய ஏனலிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறு வள்ளைதள்ளித்துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச் சொல்லைநல்லவெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே.
யான்றானெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற்சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நீவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபிஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்துகாலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகாநதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்தபொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்டவிதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே.
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்கெடுதலி லாத்தொண் டரிற் கூட் டியவா! கிரௌஞ்ச வெற்பைஅடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறைவிடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.
நூற்பயன்
சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்மருவடி வான வதனங்க ளாறும் மலர்க் கண்களுங்குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்குராப்புனை தண்டையந் தாளரு ளாய் கரி கூப்பிட்டநாள்கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே.
செங்கே ழடுத்த சிவனடி வேலுந் திருமுகமும்பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனெனஎங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே.
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்சேவிக்க என்று நினைக்கின்றி லேன் வினை தீர்த்தருளாய்வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனேவள்ளிக்கு வாய்த்தவ னே மயிலேறிய மாணிக்கமே.
சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்தஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே.
பொருள் / விளக்கம்
திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகியவற்றோடு அருணகிரிநாதரின் முக்கிய நூல்களில் ஒன்று. "வேலும் மயிலும் துணை" என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பாடல்கள் இதில் நிறைந்துள்ளன.
நிறைவுப் பாடலான "சூலம் பிடித்தெம பாசம் சுழற்றி" (107) — எமன் வந்தாலும் அஞ்சேன், ஆலகாலம் உண்ட சிவனின் குமாரனான ஆறுமுகனின் வேலும் திருக்கையும் நமக்கு மெய்த்துணை — என்று உறுதி கூறுகிறது.