தோடுடைய செவியன் — திருஞானசம்பந்தர் முதல் பதிகம்
Thodudaiya Seviyan — Lyrics in Tamil
"தோடுடைய செவியன் விடையேறி" — மூன்று வயதில் உமையம்மையின் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் பாடிய முதல் தேவாரப் பதிகம். தேவாரத்தின் தொடக்கப் பாடல்.
தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடிகாடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன்ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்தபீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
முற்றல் ஆமை இள நாகமோடே என முளைக் கொம்பு அவை பூண்டுவற்றல் ஓடு கலனாப்பலி தேர்ந்து எனது உள்ளங் கவர் கள்வன்கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்பெற்ற மூர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
நீர் பரந்த நிமிர் புன்சடை மேல் ஓர் நிலா வெண்மதி சூடிஏர் பரந்த இன வெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இது என்னப்பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி விளங்கு தலை ஓட்டில்உண் மகிழ்ந்து பலிதேரிய வந்து எனது உள்ளங் கவர் கள்வன்மண் மகிழ்ந்து அரவம் மலர்க் கொன்றை மலிந்தவரை மார்பில்பெண் மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
ஒருமை பெண்மை உடையன் சடையன் விடை ஊரும் இவன் என்னஅருமையாக் உரை செய்ய அமர்ந்து என் உள்ளங் கவர் கள்வன்கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஓர் காலம் இது என்னப்பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலராகி மழு ஏந்திஇறை கலந்த வின வெள்வளை சோர என் உள்ளங் கவர் கள்வன்கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்பிறை கலந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
சடை முயங்கு புனலன் அனலன் எரி வீசிச் சதிர் எய்தஉடை முயங்கு மர ஓடுழி தந்து எனது உள்ளங் கவர் கள்வன்கடன் முயங்கு கழி சூழ் குளிர் கானலம் பொன்னஞ் சிறகன்னம்பெடை முயங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்தஉயர் இலங்கை அரையன் வலி செற்று எனது உள்ளங் கவர் கள்வன்துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுது எல்லாம்பெயர் இலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
தாணுதல் செய்து இறை காணிய மாலொடு தண்டாமரை யானும்நீணுதல் செய்து ஒழியந்தி நிமிர்ந்தான் என உள்ளங் கவர் கள்வன்வாணுதல் செய் மகளீர் முதலாகிய வையத்து அவரேத்தப்பேணுதல் செய் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
புத்தரோடு பொறியில் சமணும் புறம் கூற நெறி நில்லாஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து என உள்ளங் கவர் கள்வன்மத்த யானை மறுகு அவ்வுரி போர்த்தது ஓர் மாயம் இது என்னப்பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே
அரு நெறிய மறை வல்ல முனி அகன்ற பொய்கை அலர் மேயபெரு நெறிய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னைஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்ததிரு நெறிய தமிழ் வல்லவர் தொல் வினை தீர்தல் எளிதாமே!
திருச்சிற்றம்பலம்
பொருள் / விளக்கம்
சீர்காழியில் குளக்கரையில் தந்தை சிவபாதவிருதயர் நீராடச் சென்றபோது, அழுத மூன்று வயதுக் குழந்தைக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டினாள். திரும்பி வந்த தந்தை "யார் தந்த பால்?" என்று கோலுடன் மிரட்டிக் கேட்க, குழந்தை வானில் விடைமேல் காட்சி தந்த இறைவனைச் சுட்டிக்காட்டி "தோடுடைய செவியன்" என்று பாடத் தொடங்கியது என்பது பெரியபுராணம் கூறும் வரலாறு. அன்று முதல் அவர் "திருஞானசம்பந்தர்" ஆனார்.
பொருள் (முதல் பாடல்): காதில் தோடு அணிந்தவன், காளை மேல் ஏறி வெண்பிறை சூடியவன், சுடலைப் பொடி பூசியவன், என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் — பிரமன் பணிந்து வணங்க அருள் செய்த பிரமாபுரத்தில் (சீர்காழி) உறையும் பெருமான் இவனே அல்லவா!
ஒவ்வொரு பாடலும் "பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே" என்று நிறைவுறுகிறது. இங்கு பாடல்கள் படிக்க எளிதாகப் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளன.