நமச்சிவாயத் திருப்பதிகம்
Namachivaya Thiruppathigam — Lyrics in Tamil
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்று தொடங்கும், "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று ஒவ்வொரு பாடலும் நிறைவுறும் திருஞானசம்பந்தரின் பதிகம்.
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேத நான்கினு மெய்ப்பொரு ளாவதுநாத னாம நமச்சி வாயவே.
நம்பு வார்நமர் நாவி னவிற்றினால்வம்பு நாண்மலர் வார்மது வொப்பதுசெம்பொ னார்தில கம்முல குக்கெலாம்நம்ப னாம நமச்சி வாயவே.
நெக்கு ளார்வ மிகப்பெரு கிநினைந்தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்தக்க வானவ ராய்த்தகு விப்பதுநக்க னாம நமச்சி வாயவே.
இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்நியமந் தானினை வார்க்கினி யானெற்றிநயன னாம நமச்சி வாயவே.
கொல்வா ரேனுங் கணம்பல நன்மைகள்இல்லாரேனு மியம்புவ ராயிடின்்:எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்நல்லார் நாம நமச்சி வாயவே.
மந்த ரம்மன பாவங்கண் மேவியபந்த னையவர் தாமும் பகர்வரேல்சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்நந்தி நாம நமச்சி வாயவே.
நரக மேழ்புக நாடின ராயினும்உரைசெய் வாயின ராயினு ருத்திரர்விரவி யேபுகு வித்திடு மென்பரால்வரத னாம நமச்சி வாயவே.
இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்மலங்கி வாய்மொழி செயதவ னுய்வகைநலங்கொ ணாம நமச்சி வாயவே.
போதன் போதன கண்ணனு மண்ணறன்பாதந் தான்முடி நேடிய பண்பராய்யாதுங் காண்பரி தாகிய லந்தவர்ஓது நாம நமச்சி வாயவே.
கஞ்சி மண்டையர் கையினுண் கையர்கள்வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்நஞ்சுள் கண்ட னமச்சி வாயவே.
நந்தி நாம நமச்சிவா யவெனும்சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெல்லாம்பந்த பாச மறுக்கவல் லார்களே.
திருச்சிற்றம்பலம்
பொருள் / விளக்கம்
அன்பால் உருகிக் கண்ணீர் பெருக ஓதுபவர்களை நல்வழிப்படுத்துவதும், நான்கு வேதங்களின் மெய்ப்பொருளாக இருப்பதும் இறைவனின் திருநாமமான "நமச்சிவாய" என்று இப்பதிகம் போற்றுகிறது. திருநல்லூர்ப் பெருமணத்தில் தம் திருமணத்தின்போது திருஞானசம்பந்தர் இப்பதிகத்தைப் பாடி, அனைவருடனும் இறைவனின் சோதியில் கலந்தார் என்பது பெரியபுராணம் கூறும் வரலாறு.