பதிகம்

பஞ்சாக்கரத் திருப்பதிகம்

Panchakkara Thiruppathigam — Lyrics in Tamil

அருளியவர்: திருஞானசம்பந்தர் · தேவாரம் — மூன்றாம் திருமுறை

"துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்" என்று தொடங்கி, "நமசிவாய" என்ற ஐந்தெழுத்தின் (பஞ்சாக்கரம்) பெருமையைப் பாடும் திருஞானசம்பந்தரின் பதிகம்.

துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்நெஞ்சக நைந்து நினைமி னாடோறும்வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்றஞ்ச வுதைத்தன வஞ்செ ழுத்துமே.

மந்திர நான்மறை யாகி வானவர்சிந்தையு ணின்றவர் தம்மை யாள்வனசெந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்கந்தியுண் மந்திர மஞ்செழுத்துமே.

ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்ஞான விளக்கினை யேற்றி நன்புலத்தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்ஆன கெடுப்பன வஞ்செழுத் துமே.

நல்லவர் தீயரெ னாது நச்சினர்செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவகொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்தல்லல் கெடுப்பன வஞ்செ ழுத்துமே.

கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்தங்குள பூதமு மஞ்ச வைம்பொழில்தங்கர வின்பட மஞ்சுந் தம்முடைஅங்கையி லைவிர லஞ்செழுத்துமே.

தும்மலிரும றொடர்ந்த போழ்தினும்வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே.

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்பீடை கெடுப்பன பின்னை நாடொறும்மாடு கொடுப்பன மன்னு மாநடம்ஆடி யுகப்பன வஞ்செ ழுத்துமே.

வண்டம ரோதி மடந்தை பேணினபண்டை யிராவணன் பாடி யுய்ந்தனதொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கண்ட மளிப்பன வஞ்செழுத்துமே.

கார்வண னான்முகன் காணுதற் கொணாச்சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கார்வண மாவன வஞ்செ ழுத்துமே.

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்சித்தத் தவர்க டெளிந்து தேறினவித்தக நீறணி வார்வி னைப்பகைக்கத்திர மாவன வஞ்செ ழுத்துமே.

நற்றமிழ் ஞானசம் பந்த னான்மறைகற்றவன் காழியர் மன்ன னுன்னியஅற்றமின் மாலையீ ரைந்து மஞ்செழுத்துற்றன வல்லவ ரும்ப ராவரே.

திருச்சிற்றம்பலம்

பொருள் / விளக்கம்

உறங்கும்போதும் விழித்திருக்கும்போதும் நாள்தோறும் நெஞ்சம் நைந்து நினைக்க வேண்டியது அஞ்செழுத்தே என்று இப்பதிகம் தொடங்குகிறது. ஒவ்வொரு பாடலும் "அஞ்செழுத்துமே" என்று முடிகிறது. திருஞானசம்பந்தருக்கு உபநயனம் நடந்தபோது, வேதியர்களுக்கு ஐந்தெழுத்தின் உண்மையை உணர்த்திப் பாடியது என்பது மரபு.