திருமுறை

திருவெம்பாவை

Thiruvempavai — Lyrics in Tamil

அருளியவர்: மாணிக்கவாசகர் · திருவாசகம் (எட்டாம் திருமுறை)

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை" என்று தொடங்கும் மாணிக்கவாசகரின் இருபது பாடல்கள். திருவண்ணாமலையில் அருளியது; மார்கழி மாதம் அதிகாலையில் பாடப்படுகிறது.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்துபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னேஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்பேசும்போ தெப்போ(து) இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோஎத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோசித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனைஇத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோஎண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்துஎண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)ஓலம் இடினும் உணராய் உணராய்காண்ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

மானே நீ நென்னலை நாளை வந்துங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர்உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோவன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

கோழி சிலம்புச் சிலம்பும் குருகுஎங்கும்ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோவாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம்ஏலார் எம்பாவாய்.

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவேபேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய்.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடிஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்மையார் தடங்கண் மடந்தை மணவாளர்ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால்எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்தபொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்கொங்கைகள் பொங்கப் குடையும் புனல்பொங்கப்பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடிவேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிசோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடிஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வதைதன்பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூரநீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடிஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்குமுன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளேஎன்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக்கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டிஇங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனைஅங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதைநங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்தண்ணார் ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்பெண்ணாகி ஆணாய் அலியாய்ப பிறங்கொளிசேர்விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்றுஅங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்கஎங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்ககங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்கஇங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.

திருச்சிற்றம்பலம்

பொருள் / விளக்கம்

பெண்கள் ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி, நீராடச் சென்று சிவபெருமானைப் பாடுவதாக அமைந்தவை இப்பாடல்கள். ஒவ்வொரு பாடலும் "ஏலோர் எம்பாவாய்" என்று நிறைவுறுகிறது.

வைணவர்களுக்குத் திருப்பாவை போல, சைவர்களுக்குத் திருவெம்பாவை மார்கழி மாதத்தின் சிறப்புப் பாடல். திருவாதிரைத் திருநாளுக்கு முந்தைய பத்து நாட்களில் சிவாலயங்களில் பாடப்படுகிறது.