பாசுரம்

திருப்பாவை

Thiruppavai — Lyrics in Tamil

அருளியவர்: ஆண்டாள் · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்" என்று தொடங்கும் ஆண்டாளின் முப்பது பாசுரங்கள். மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் பாடப்படுகிறது.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்நாரா யணனே நமக்கே பறைதருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்பையத் துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலே நீராடிமையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்கு பெரும்செந்நெல் ஊடு கயலுகளப்பூங்குவ ளைப்போதில் பொறிவண்டு கண்படுப்பத்தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!

ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்;ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்பாழியம் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரி போல்நின் றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராடி மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனைத்தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்போய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்!

புள்ளும் சிலம்பினகாண்! புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெல்ல எழுந்து அரிஎன்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ! பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயண மூர்த்திகேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்!

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்கூவுவான் வந்து நின்றோம்; கோது கலமுடையபாவாய்! எழுந்திராய்! பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமேதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

கற்றுக் கறவைக் கணங்கள் பலகரந்துசெற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்குற்றம் ஒன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியேபுற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலை வழியே நின்று பால் சோரநனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதேபள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோசில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரணவாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

அம்பரமே! தண்ணீரே! அறஞ்செய்யும்எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்தஉம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனைஎத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்பமாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.

அங்கண் மாஞாலத் தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடையசீரியசிங் காசனத்திருந்து யாம்வந்தகாரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்தகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னைஅருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடிவருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வனபாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,கோல விளக்கே, கொடியே, விதானமே,ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். 26

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னைபாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;நாடு புகழும் பரிசினால் நன்றாக,சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவேபாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரகூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடுஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தாஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடுஉற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைதிங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணிபுதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்னசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

பொருள் / விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் (கோதை), ஆயர் சிறுமியர் பாவை நோன்பு நோற்பதாகப் பாவித்து, கண்ணனை அடைய வேண்டிப் பாடியவை இந்த முப்பது பாசுரங்கள். "சங்கத் தமிழ்மாலை முப்பதும்" என்று நிறைவுப் பாடல் கூறுகிறது.

பாராயணம்: மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் அந்த நாளுக்குரிய பாசுரத்தை (முதல் நாள் 1, இரண்டாம் நாள் 2 …) அதிகாலையில் பாடுவது வழக்கம். திருமணம் கைகூட வேண்டிப் பெண்கள் பாராயணம் செய்வதும் மரபு.