ஸரஸ்வதி நமஸ்துப்யம்
Saraswathi Namasthubhyam — Lyrics in Tamil
படிக்கத் தொடங்கும் முன் மாணவர்கள் சொல்லும் சரஸ்வதி ஸ்லோகம். கல்வியில் வெற்றி வேண்டி விஜயதசமி, சரஸ்வதி பூஜை நாட்களில் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணிவித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
பொருள் / விளக்கம்
ஸரஸ்வதி நமஸ்துப்யம் — சரஸ்வதி தேவியே, உனக்கு வணக்கம்,
வரதே — வரங்களை அருள்பவளே,
காமரூபிணி — விரும்பிய வடிவம் கொள்பவளே,
வித்யாரம்பம் கரிஷ்யாமி — நான் கல்வியைத் தொடங்குகிறேன்,
மே ஸதா ஸித்திர் பவது — எனக்கு எப்போதும் வெற்றி (கைகூடுதல்) உண்டாகட்டும்.